Benifits of Kaarthigai Month – கோரிய வரமருளும் கார்த்திகை மாதம்

கோரிய வரமருளும் கார்த்திகை மாதம்

 

 

திருவண்ணாமலை திருத்தலம் ஸ்ரீ சக்கர வடிவில் அமைந்துள்ளதால் இது நவத்துவாரபுரி என போற்றப்படுகிறது. அதனால் கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் மேற்கொள்வது பெரும் புண்ணியம் ஆகும். கிரிவலம் வரும்போது மழை பெய்ய நேரிட்டால் அதில் நனைந்து கொண்டே வலம் வரவேண்டும். அவ்வாறு மழையில் நனைந்த படியே கிரிவலம் வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும் கிடைக்கும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞான பூர்வமாகவும் சொல்லப்படுகிறது.

 

சொக்கநாதரை நினைவுக்கொண்டே கார்த்திகை மாதத்தில் ஸ்ரீ  ரங்கத்தில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. அவ்விழாவில் சந்தன மண்டபத்தில் எழுந்தருளும் பெருமாளிடம், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி, திருவிழா குறித்த விவரத்தை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதற்கு ஸ்ரீ  முகம் எனப்பெயர்.

 

கார்த்திகை மாதம் நம் வீட்டில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறு, வீட்டில் குடத்தில் எடுத்து வைக்கும் தண்ணீர் உள்ளிட்ட நீரில் மகாவிஷ்ணு வாசம் செய்கிறார் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

 

கார்த்திகை முதல் நாளில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்பு பெற்றது. இம்மாதத்தில் பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால், நிலவின் ஒளி மிகவும் பிரகாசமாக இருக்கும். அதனால் தான் எல்லா மாத பௌர்ணமியை விட கார்த்திகை மாத பௌர்ணமிக்கு சிறப்பு அதிகம். மேலும் கார்த்திகை பௌர்ணமியன்று விரதம் இருந்தால் சிவபெருமானும், முருகப்பெருமானும் அருள் புரிவார்கள் என வேதங்கள் கூறுகின்றன.

 

கார்த்திகை மாதத்தில் சூரியன், விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறான். அதனால் தான் இந்த மாதத்தை விருச்சிக மாதம் என அழைப்பதுண்டு.

விஷ்ணுவுக்கும், துளசிக்கும் திருமணம் நடந்தது கார்த்திகை மாதத்தில் தான். இம்மாதத்தில் மகாவிஷ்ணுவை துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

நாரதர் கார்த்திகை விரதத்தை 12 ஆண்டுகள் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபட்டு, நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் சக்தியை பெற்றார்.

மகாவிஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் நிகழ்ந்தது. இம்மாதத்தில் தான்.

அயோத்தி மன்னன் பகிரன், கார்த்திகை விரதம் இருந்து கங்கையை பூமிக்கு கொண்டு வரும் சக்தியை பெற்றான்.

கார்த்திகை துவாதசி திதியன்று அன்னதானம் வழங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

காந்தன் பூ மிகுதியாக மலரும் மாதம் கார்த்திகை.

மாலையில் கார்த்திகை நட்சத்திரம் இம்மாதத்தில் தோன்றும்.

திருகார்த்திகை விழா அவ்சி, அளச்சர், அளகு, அறுவாய், ஆரல், இரால், அரிநாள், நாவிதன் என்றும் அழைக்கப்படுகின்றன.

கார்த்திகை மாதம், சிவன், விஷ்ணு, முருகன், ஐயப்பன் ஆகியோருக்கு மிகவும் சிறப்பு பெற்றது.

 

இம்மாதத்தில் மகாவிஷ்ணுவின் வடிவமாக கருதப்படும் சாளக்கிராமங்களுக்கு செய்யப்படும் பூஜை ஆயிரம் மடங்கு பலனை தரும்.

இம்மாதத்தில் சூரியன் உதயமாகும் நேரத்தில் குளித்தால், புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவன் ஜோதி வடிவில் காட்சி தந்த மாதம்.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமைகள் மிகச்சிறப்பு பெற்றது. சோமவாரம் என அழைக்கப்படும் .இந்த சோம வார நாட்களில் மாலையில் சிவபெருமானுக்கு நடைபெறும் சங்காபிஷேகத்தை தரிசிப்பது சிறப்பாகும்.

கார்த்திகை மாதம் வரும் அமாவாசை அன்று திருவிடைநல்லூரில் ஸ்ரீ தர் ஐயா்வாழ் திருமடத்திலுள்ள கிணற்றில் கங்கை பிரவாசித்தது. ஆகவே அன்றைய தினம் அங்கு நீராடினால் கங்கையில் நீராடிய பாக்யம் கிட்டும்.