Diwali Special Recipes – Navarathna Korma

 1,310 total views,  2 views today

நவரத்தின குருமா

தேவையான பொருட்கள்

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் – மூன்று

தனியா – ஒரு கைப்பிடி

சீரகம் – இரண்டு டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

வெங்காயம் – மூன்று (நறுக்கியது)

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

முந்திரி – எட்டு

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

பிரிஞ்சி இலை – ஒன்று

பட்டை – இரண்டு

லவங்கம் – இரண்டு

ஏலக்காய் – இரண்டு\

சீரகம் – அரை டீஸ்பூன்

குடைமிளகாய் ,மூன்று கலர் – அரை கப் (நறுக்கியது)

நறுக்கி, வேகவைத்த உருளைகிழங்கு, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ் – ஒரு கப்

உப்பு – தேவைகேற்ப

அலங்கரிக்க:

முந்திரி – சிறிதளவு

கீரிம் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை

* கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

* பிறகு, அதே கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் முந்திரி, வெங்காயம், தக்காளி, சேர்த்து வறுத்த எடுத்து கொள்ளவும்.

* பின், வறுத்த இரண்டையும் சேர்த்து, அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

* பிறகு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கி வைத்து கொள்ளவும்.

* அதே கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும், வேகவைத்த காய்கறிகள் சேர்த்து வதக்கவும், பின், தாளித்த மற்றும் அரைத்து வதக்கிய விழுது சேர்த்து நன்றாக வதக்கவும், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

* பிறகு, ஒரு கிண்ணத்தில் ஊற்றி மேலே கீரிம், முந்திரி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.