How to do Thulasi Mada Pooja – துளசி மாட பூஜை

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக உதவும் துளசி மந்திரம்

காக்கும் தெய்வமான திருமாலை எந்நேரமும் போற்றி அவர் நாமத்தை துதிக்கொண்டிருப்பவள் துளசி. துளசி மாலை இல்லாத பெருமாள் வழிபாட்டினை நாம் எந்த கோவிலிலும் காண இயலாது.. அந்த அளவிற்கு பெருமாளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவள் துளசிதேவி. துளசியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை. நமது வீடுகளில் துளசி மாடம் அமைத்து அதற்கு முறையாக பூஜை செய்து வழிபடுவதன் பலனாக நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். அந்த வகையில் துளசி பூஜைக்குரிய துளசி மந்திரம் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துளசி மந்திரம் :

நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே
நமோ மோக்ஷப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே.

துளசி பூஜை செய்யும் சமயத்தில் துளசி தேவியையும், லட்சுமி தேவியையும், மஹாவிஷ்ணுவையும் மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 9 முறை கூறி வழிபட வேண்டும். இதன் பலனாக நமக்கு மூவரின் அருளும் ஒருசேர கிடைக்கும். துளசியில் பல வகை உண்டு இதில் பச்சை இல்லை துளசியை நாம் ஸ்ரீதுளசி என்கிறோம் இதில் ஸ்ரீ என்பது லட்சுமியை குறிக்கிறது. இந்த வகை துளசியை நாம் துளசி அதிர்ஷ்ட என்கிறோம். அதே போல கரும்பச்சை இலைகளை கொண்ட துளசியை நாம் கிருஷ்ணர் துளசி என்கிறோம். இந்த வகை துளசி கிருஷ்ணர் பூஜைக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இப்படி எவ்வகை துளசியாயினும் அதற்க்கு ஒரு தனி சிறப்பு உண்டும். ஆகையால் துளசியை பூஜித்து நாம் நலன்களை பெறுவோம்.