Pepper Lamp for Bhairava in Tamil – மிளகு தீபம்

கால பைரவரை அஷ்டமி திதியில் ராகு நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

கால பைரவரை மிளகு தீபம் ஏற்றி வழிபடுவதால் வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சீரடையும்.

மிளகு தீபம் ஏற்றுவது எப்படி?

  • ஒரு வெள்ளை நிற புதியத் துணியில், 27 மிளகுகளை எடுத்து, துணியை முடிந்து திரி போல முடிந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு மிளகைத் துணியோடு நல்லெண்ணையில் ஒரு இரவு முழுவதும் நனைத்து வைக்க வேண்டும்.
  • அடுத்த நாள், இந்த மிளகு முடியை நல்லெண்ணையுடன் சேர்த்து ஒரு அகல் விளக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • விளக்கை கால பைரவர் முன்பு ராகு நேரத்தில் ஏற்றி, கால பைரவாஷ்டகத்தைப் பக்தியுடன் படிக்க வேண்டும்.

மிளகு தீபத்தின் முக்கியத்துவம்:

  • மிளகு தீபம் ஏற்றி பைரவரை வழிபடுவதால் நவக்கிரக தோஷங்களின் பாதிப்புகளை குறைக்கலாம். மிக முக்கியமாக ராகு திசை மற்றும் ராகு புத்தியில் மிளகு தீபம் ஏற்றி பைரவரை வழிப்பட்டால் ராகுவினால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கலாம்.
  • 27 மிளகுகள் 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது.
  • கால பைரவரை வழிபட உகந்த நேரம் ராகு காலம் ஆகும்.
  • கால பைரவரை வழிபட உகந்த திதி அஷ்டமி திதியாகும். அதிலும் தேய்பிறை அஷ்டமி கூடுதல் சிறப்பு.
  • மிளகு தீபம் ஏற்ற அகல் விளக்கை பயன்படுத்துவதைக் காட்டிலும் பூசணிக்காய் விளக்கு அல்லது தேங்காய் விளக்கு ஏற்றி வழிப்படுவதால் சிறந்த பலன்கள் உண்டாகும்.
Please follow and like us: