குரு பகவானின் மேலும் பல சிறப்புகளையும், குரு பகவானின் முழுமையான அருளை பெறுவதற்கான விரத வழிமுறைகளை பற்றி இங்கு காண்போம்.
நவகிரகங்களில் முடிந்த அளவு நன்மையான பலன்கள் அதிகம் வழங்க கூடிய ஒரே கிரகம் குரு பகவான் ஆவார். இந்த குரு பகவானின் மேலும் பல சிறப்புகளையும், குரு பகவானின் முழு அருளை பெறுவதற்கான விரத வழிமுறைகளை பற்றி சில தகவல்கள் உங்களுக்காக.
குரு பகவான் காசி நகரில் சிவபெருமானை குறித்து நீண்ட காலம் தவமிருந்து, சிவனின் காட்சி கிடைக்கப்பெற்று தேவர்களுக்கு குருவாக இருக்கும் தேவகுரு பதவியையும், நவ கிரகங்களில் சுப கிரகமாக இருக்கும் வரத்தை பெற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது .
ஜாதக கட்டடத்தில் குரு பகவானின் 5 , 7 ஆம் பார்வை பெறும் பாவகங்கள் சகல சௌபாக்கியத்தையும் வழங்கக் கூடியது. ஒரு ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் வியாழ நோக்கம் எனப்படும் குரு பகவானின் சுப பார்வை பெற்ற காலத்தில் செய்யப்படும் திருமணம் தம்பதியரின் வாழ்வில் சகல நன்மைகளையும் ஏற்படுத்தும். குரு பகவானின் சுப பார்வை தன் ஒருவருக்கு குழந்தை பேரு கிடைக்கவும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஜாதகத்தில் பிற கிரகங்கள் எப்படிப்பட்ட பாதகமான அமைப்பில் இருந்தாலும், அக்கிரகங்கள் மீது குரு பகவானின் சுப பார்வை ஏற்படும் பட்சத்தில் பிற கிரகங்களால் பாதகமான பலன்கள் ஏற்படாமல் தடுக்கப்படும்.
நீதி சாஸ்திரங்கள் பலவற்றை கற்றறிந்த குரு பகவான் ஒரு ஜாதகருக்கு எந்த அளவிற்கு நற்பலன்களை அளிக்க வேண்டும் என தீர்மானம் செய்கிறார். மிக உயர்ந்த, அதிகாரம் மிக்க பதவிகள், அமைப்புகள் பெரும் நிறுவனங்களை தலைமையேற்று வழிநடத்திச்செல்லும் யோகம், பெரும்பான்மையான மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டும் ஆன்மீக தலைவர், பீடாதிபதி, துறவி போன்ற அனைத்திற்கும் காரகனாக குரு பகவான் இருக்கிறார்.