Category «Lord Shiva»

காலபைரவ அஷ்டகம் | Kaala Bhairava Ashtakam in Tamil

காலபைரவ அஷ்டகம் மனப்பயங்கள் விலக, ஆரோக்கிய வாழ்வுக்கு தினமும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்ல வேண்டிய ஆதிசங்கரர் அருளியது காலபைரவ அஷ்டகம் போகம், முக்தி இவைகளை அளிப்பவரும்,பிரசித்திபெற்ற அழகிய வடிவினரும்,அடியார்களிடம் அன்பு கொண்டவரும்,காத்தல் கடவுளாக இருப்பவரும், எல்லா உலகையும் தன் வடிவில் கொண்டவரும்,நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகியசலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவரே,காசியம்பதியின் தலவரே உங்களுக்கு நமஸ்காரம்.எனக்கு அருள் புரிவாய் ஐயனே!

ஸ்ரீகும்பேஸ்வரர் துதி | Sri Kumbeshwara Swamy Stotram

ஸ்ரீகும்பேஸ்வரர் துதி கிரக தோஷங்கள் நீங்கி வேண்டிய வளம்பெற மாசி மகத்தன்று சொல்ல வேண்டிய ஸ்ரீகும்பேஸ்வரர் துதி எல்லா லக்னங்களுக்கும் அதிபதிகளான நவகிரகங்களுக்குத் தலைவராக இருப்பவரே, கும்பேஸ்வரா உன்னை வணங்குகின்றேன். நவகிரகங்களால் பூஜிக்கப்படுபவரே,எண்ணிய தெல்லாம்தரும் காமதேனு மற்றும் அனைத்து தேவர்களாலும் வணங்கப்படுபவரே, கும்பேஸ்வரனே உனக்கு எனது வணக்கங்கள். ஐந்து முகங்களையுடைவரே,பிரளய காலத்தில் மிதந்து வந்தஅமிர்த கலயத்தை உடைத்துஎல்லோருக்கும் எல்லா வளமும் வழங்கியகும்பேஸ்வரா உன்னை வணங்குகின்றேன்.எனக்கு அருள் புரிவாய்!

ஸ்ரீதட்சிணாமுர்த்தி துதி | Sri Dakshinamurthy Stotram

குழந்தைபருவம், வாலிபம், முதுமை, விழிப்பு, சொப்பனம் முதலிய மாறுபாடுகள் ஊடே ‘நான்’ என என்றும் மாறுபடாமல்-சிவன் தன்னை வெளிப்படுத்துதல்- வியாழன் மற்றும் பௌர்ணமி நாட்களில் சொல்ல வேண்டிய ஸ்ரீதட்சிணாமுர்த்தி துதி தன் இடது மடியில் இருத்தி பர்வத ரஜகுமாரியாகிய பார்வதிதேவியை அனைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமைமிக்கவளாய் சந்திர ஒளிபோன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அனைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும் கீழ்க்கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும் இன்னொரு …

உமா மகேஸ்வரர் துதி | Uma Maheswara Stotram

குடும்ப வாழ்க்கையில் மங்களகரமான பலன்கள் பெற உமா மகேஸ்வரர் துதி என்றைக்கும் இளமையானவர்களும், உலகங்களுக்கு சர்வ மங்களத்தை அளிப்பவர்களும், பார்வதியை மணக்க வேண்டும் என்று பரமசிவன் தவம் செய்ய, பரமசிவனை மணக்க வேண்டும் என பார்வதி தவம் செய்ய, அதனால் ஒரே சரீரத்தில் இணைபிரியாது இருப்பவர்களும், மலையரசனின் மகளான உமாவுக்கும், காளைக் கொடியுடைய மகேஸ்வரனுக்கும் எனது வணக்கங்கள். ஆனந்தத்தைத் தரும் திருவிழாக்களை உடையவர்களும், காதலர்கள்போல எப்போதும் ஒன்றாயிருப்பவர்களும், தம்மை வணங்கும் பக்தர்களுக்கு, விரும்பியதையெல்லாம் அளிப்பவர்களும், மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டு, …

சிவபார்வதி துதி | Shiva Parvati Thuthi

வற்றாதசெல்வம், குன்றாத ஆயுள் பெற சிவபார்வதி துதி: கயிலை நாதரான கிரீசரைப் போற்றுகிறேன். மலையரசன் மகளான கிரிஜாவை வணங்குகிறேன். ரிஷபக் கொடியுடையவருக்கு நமஸ்காரம். நமஸ்காரம். சிம்மக் கொடியைக் கொண்ட சிவைக்கு வணக்கம். மகிமை மிக்க விபூதியை தரிப்பவருக்கு வணக்கம். சந்தனாபிஷேகப்பிரியரைப் போற்றுகிறேன். வணக்கம். கொம்பின் நுனி போன்ற கூர்விழியாள் ஈஸ்வரிக்கு வணக்கம். தாமரை கண்ணாளைப் போற்றித் துதிக்கிறேன். திரிசூலமேந்தியவரே, உமக்கு நமஸ்காரம். ஒளிரும் தாமரையைக் கையில் ஏந்தியவளுக்கு வணக்கம். திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரருக்கு நமஸ்காரம். பல …

திருநீற்றுத்துதி | Thiruneetru Pathigam Shaivam

திருநீற்றுத்துதி ஸ்காந்தபுராணம் கூறும் திருநீற்று திதி – திருமகளின் அருள் சேர தினமும் சொல்லவும். தரித்துக் கொண்ட உடனே எல்லா பாவங்களையும் போக்கவல்லது விபூதி. அதை ஜபிப்பதாலும், சிறிதளவு உட்கொள்வதாலும், பூசிக்கொள்வதாலும் எல்லா சுகங்களையும் அளிப்பது. எல்லாவற்றையும் தரக்கூடியது என்பதாலேயே அதற்கு பஸ்மம் என்ற பெயர் ஏற்பட்டது. உரிய மந்திரங்களைச் சொல்லி சரியான முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியை எவனொருவன் தரிக்கிறானோ, அவனுடைய எல்லா பாவங்களும் விலகுவதோடு அவனுடைய எல்லா விருப்பங்களும் கைகூடலாகும். பார்வதியின் பதியான பரமேஸ்வரனுடைய மகிமையை …

ஞான சம்பந்தர் அருளிய நோய் தீர்க்கும் பதிகம் | Noi Theerkum Sivan Manthiram in Tamil

நோய் தீர தினமும் சொல்ல சிவனின் நோய் தீர்க்கும் பதிகம் ஞான சம்பந்தர் அருளிய நோய் தீர்க்கும் பதிகம் – திருநீற்றின் மகிமையை உணர்த்தும் ஞான சம்பந்தர் அருளியது நோய் தீர்க்கும் பதிகம் மந்திரம் ஆவது நீறு. வானவர் மேலது நீறு. சுந்தரம் ஆவது நீறு. துதிக்கப்படுவது நீறு. தந்திரம் ஆவது நீறு. சமயத்தில் உள்ளது நீறு. செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாய் திருநீறே! வேதத்தில் உள்ளது நீறு. வெந்துயர் தீர்ப்பது நீறு. போதம் தருவது …

ஆதிசங்கரர் அருளிய சிவபஞ்சாக்ஷர துதி | Shiva Panchakshara Stotram Lyrics in Tamil

ஆதிசங்கரர் அருளிய சிவபஞ்சாக்ஷர துதி தினமும் படிக்க வேண்டிய ஆதிசங்கரர் அருளிய சிவபஞ்சாக்ஷர துதி நாகபதி மலையானே! நயனங்கள் மூன்றானே!ஆகமணி நீற்றானே! அருந்தேவா பேரீசா!ஆகுநித்யா! தூயவனே! ஆர்திசையின் ஆடையனே!நாகமுறை நகாரனே! நமசிவாயனே! போற்றி! மன்மங்கை நீர்ச்சாந்தம் மணங்கமிழ்ப் பூசிட்டோய்!தொல்நந்தி ப்ரமதபதி தூத்தலைவா! மகேசனே!நல்மண மந்தாரமுதல் நறைமலராற் பூசை கொள்வோய்!நல்லுறவே மகாரனே! நமசிவாயனே போற்றி! சிவமூர்த்தி! கவுரிமுக சீர்க்கமல வனமலர்த்தும்நவக்கதிரே! தட்சமகம் நசித்திட்டோய்! நீலகண்டா!துவண்டாடும் விடைக்கொடியைத் தூக்கியவா! தொல்பொருளே!நவநவத்தோய்! சிகாரனே! நமசிவாயனே போற்றி! வசிட்டமுனி கலசமுனி கௌதம மா …

சிவசடாட்சர துதி | Shiva Shadakshara Stotram

சிவசடாட்சர துதி | Shiva Shadakshara Stotram சீரான வாழ்விற்கு வழிகாட்டும் மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி நாட்களில் சொல்ல வேண்டிய சிவசடாட்சரதுதி ஓங்காரமே பரப்பிரம்மம் அனைத்தும் ஓங்காரத்திலிருந்து தோன்றியவை. ‘அ’ கார ‘உ’ கார ‘ம’ கார சங்கமத்தினால் தோன்றிய ஓங்காரனுக்கு என் நமஸ்காரம்.தேவதேவரே உமக்கு நமஸ்காரம், பரமேஸ்வரரே உமக்கு நமஸ்காரம். வெள்ளேற்று அண்ணலே நமஸ்காரம். ‘ந’ கார சொரூபரே உமக்கு நமஸ்காரம்மகாதேவரும் மகாத்மாவும் …