Thayumanavar Songs – சிவன்செயல்
22. சிவன்செயல் சிவன்செய லாலே யாதும் வருமெனத் தெறேன் நாளும் அவந்தரு நினைவை யெல்லாம் அகற்றிலேன் ஆசை வெள்ளங் கவர்ந்துகொண் டிழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட் டையோ பவந்தனை ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவி யேனே. 1. பாவியேன் இனியென் செய்கேன் பரமனே பணிந்துன் பாதஞ் சேவியேன் விழிநீர் மல்கச் சிவசிவ என்று தேம்பி ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ சாவிபோஞ் சமயத் தாழ்ந்து சகத்திடைத் தவிக்கின் றேனே. 2. இடைந்திடைந் தேங்கி மெய்புள …