Category «Spiritual Stories»

Mahabharatham story in Tamil 93 – மகாபாரதம் கதை பகுதி 93

மகாபாரதம் பகுதி-93 ​ அந்த வேலாயுதம் கடோத் கஜனின் மார்பைத் துளைத்து கொண்டு பறந்தது. மாபெரும் மலை சாயந்தது போல, கடோத் கஜன் தனது முகம் தரையில் படும் படியாக கீழே விழுந்து உயிர் விட்டான். இதுகண்டு பாண்டவர் படை அதிர்ச்சியடைந்தது. தங்களுடைய புத்திரன் இறந்தது குறித்து, பாண்டவர்களுக்கு பெரும் வருத்தம் உண்டானது. இப்போதும் கிருஷ்ண பரமாத்மாதான் பாண்டவர்களுக்கு கை கொடுக்க வேண்டியதாயிற்று. செயலிழந்து நின்ற பாண்டவர் களிடம், மைத்துனர்களே! விதிப் பயனை யாராலும் வெல்லமுடியாது. தத்துவ …

Mahabharatham story in Tamil 91– மகாபாரதம் கதை பகுதி 91

மகாபாரதம் பகுதி-91 ​ கண்ணபிரான் உடனே தனது பாஞ்சஜன்ய சங்கை ஊதினார். அதன் ஒலி கேட்டு களத்தில் நின்ற அனைவரும் அடங்கி நின்றனர். அப்போது, அர்ஜுனனிடம், அர்ஜுனா! கலங்காதே! இதோ இந்த வேலாயுதத்தை வைத்துக் கொள். முன்பொரு முறை பூமாதேவி இந்த வேலால் தான் நரகாசுரனைக் கொன்றாள். இது எத்தகைய கவசங்களையும் துளைக்கும் சக்தி வாய்ந்தது,என்று சொல்லிக் கொடுத்தார். அதைக் கொண்டு துரியோதனனை அர்ஜுனன் கொன்றிருக்கலாம், ஆனால், தன் அண்ணன் பீமன் செய்த சபதம் நினைவுக்கு வந்தது. …

Mahabharatham story in Tamil 90 – மகாபாரதம் கதை பகுதி 90

மகாபாரதம் பகுதி-90 ​ கிருஷ்ணரை அர்ஜுனன் வேகப் படுத்திக் கொண்டிருந்தான். விரைவாக தண்ணீர் குடித்துவிட்டு வரும்படி அவசரப்படுத்தினான். இவர்கள் குளம் உண்டாக்கி தண்ணீர் குடிப்பதை பார்த்த எதிரி வீரர்கள் கூட்டமாக வந்து சூழ்ந்தனர். அவர்களை எல்லாம் அர்ஜுனன் வீர சொர்க்கம் அனுப்பினான். இதையடுத்து துரியோதனன் தனது தேரில் வேகமாக அர்ஜுனனை நோக்கி வந்தான். அர்ஜுனனுக்கு ஆச்சரியமாக போய் விட்டது. கிருஷ்ணா! இந்த துரியோதனன் என் கண்களில் இன்று படவே இல்லை. வெகுதுõரத்தில் நின்று கொண்டிருந்தான். ஆனால், இப்போது …

Mahabharatham story in Tamil 89 – மகாபாரதம் கதை பகுதி 89

மகாபாரதம் பகுதி-89 ​ துரியோதனா! பிரம்மன் கூட சொன்ன சொல்லை சில சமயங் களில் காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதைப் போலத் தான் நானும்! ஜயத்ரதனைக் காப்பாற்றுவேன் என்று உன்னிடம் வாக்களிப்பதை விட செயலில் நிரூபிக்கவே விரும்புகிறேன், என்றதும், துரியோதனன் படை வீரர்களை நோக்கி, மிக மிக பணிவாக, நாளை ஒரே ஒரு நாள். ஜயத்ரதனைப் பாதுகாத்து விட்டால் அர்ஜுனன் அழிவான். அதன்பின் வெற்றி நம் பக்கம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள், என வேண்டிக்கொண்டான். கர்ணன், அஸ்வத்தாமன், …

Mahabharatham story in Tamil 88 – மகாபாரதம் கதை பகுதி 88

மகாபாரதம் பகுதி-88 ​ கடோத் கஜனுக்கு குழப்பமும் கோபமும் மேலிட்டது. இந்தப் பெரியப்பாவுக்கு என்னாச்சு! யாராவது எதிரியிடம் போய், நான் இன்னின்ன செய்யப் போகிறேன் என்று சொல்வார்களா? அவன் சுதாரித்துக் கொள்ள மாட்டானா? என்று யோசித்தவன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு, பெரியப்பா! தாங்கள் சொல்வது ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை. நம் வலிமை பற்றி எதிரிக்குத் தெரிந்தால் அது அவனுக்கு சாதகமாக அல்லவா ஆகி விடும். நம் பலத்தை நாமே குறைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? அதிலும் அபிமன்யுவை வஞ்சகமாகக் …

Mahabharatham story in Tamil 87 – மகாபாரதம் கதை பகுதி 87

மகாபாரதம் பகுதி-87 ​ அர்ஜுனா, மனதை திடமாக்கிக் கொள். என் அன்பு மருமகன், என் தங்கை சுபத்ரையின் புதல்வன் அபிமன்யு வீர சொர்க்கம் அடைந்தான், என்று நா தழுதழுக்க கிருஷ்ண பகவான் சொன்னதும், அர்ஜுனன் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. அவனது அழுகுரலும், புலம்பலும் கல் நெஞ்சத்தாரையும் கரைத்தது. மகனே! போய் விட்டாயா? தன் பேரனான உன்னோடு விளையாடி மகிழ உன் தாத்தா இந்திரனும் (இந்திரன் அர்ஜுனனின் தந்தையல்லவா?), பாட்டி இந்திராணியும் ஆசை கொண்டு, தேவலோகத்துக்கு இவ்வளவு விரைவில் …

Mahabharatham story in Tamil 86 – மகாபாரதம் கதை பகுதி 86

மகாபாரதம் பகுதி-86 ​ துரியோதனனுக்கு இப்போது இக்கட்டான நிலை. ஒரு சிறு பையன், இத்தனை பேரை அழிக்கிறான் என்றால், துரோணர், கிருபாச்சாரியார், கர்ணன், அஸ்வத்தாமன், சகுனி போன்ற மாபெரும் சக்திகளையெல்லாம் புறமுதுகோடச் செய்கிறான் என்றால், அர்ஜுனன், பீமன் போன்ற மகாசக்திகளுக்கெல்லாம் நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்ற கவலையுடன் நின்ற போது, மாவீரன் கர்ணன் அவன் முன்னால் வந்தான். துரியோதனன் அவனிடம், கர்ணா! அபிமன்யு நம்மவரை துவம்சம் செய்கிறான். இப்போது அர்ஜுனன் அவன் அருகில் இல்லை. அவனும், …

Mahabharatham story in Tamil 85 – மகாபாரதம் கதை பகுதி 85

மகாபாரதம் பகுதி-85 ​ அவன் பல வலிமையான பாணங்களால் அபிமன்யுவைக் காயப்படுத்தினான். ஆனால், அபிமன்யு தன் உடலில் இருந்து கொட்டும் குருதி கண்டு மிகுந்த ஆனந்தமும் ஆவேசமும் அடைந்து கர்ணனை நோக்கி விட்ட அம்புகள் அவனை நிலைகுலையச் செய்தன. கர்ணன் தன் தேருடன் தோற்றோடினான். பின்னர் கிருபாசாரியார் அபிமன்யுவுடன் போர்செய்ய வந்தார். அத்துடன் சகுனி, அவனது மகன் ஆகியோர் அவனைச் சூழவே, கோபமடைந்த அபிமன்யு ஒரு பாணத்தை விட அது சகுனியின் மகனின் தலையை அறுத்தெறிந்தது. சகுனி …

Mahabharatham story in Tamil 84 – மகாபாரதம் கதை பகுதி 84

மகாபாரதம் பகுதி-84 ​ பகவான் நாராயணனின் அவதாரமான அந்தக் கிருஷ்ணன் மீது பகதத்தன் தொடர்ந்து அம்புகளை விடுத்தான். அந்த அம்புகள் கிருஷ்ணனின் ஸ்பரிசம் படுவதற்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகக் கருதி, கிருஷ்ணனின் உடலில் மாலை போன்ற வடிவில் போய் விழுந்தன. அந்த அம்புமாலையைத் தாங்கிய கிருஷ்ணரின் அழகை தேவர்கள் வானுலகில் இருந்தபடி புகழ்ந்தனர். உலக உயிர்கள் பகவானின் மீது பல துõஷணைகளைச் செய்கின்றன. நீ ஆண்டவனா? உனக்கு கண் இருக்கா? காது இருக்கா? என்றெல்லாம் நாம் கூட …