Category «மகாபாரதம் | Mahabharatham»

Mahabharatham story in Tamil 95 – மகாபாரதம் கதை பகுதி 95

மகாபாரதம் பகுதி-95 ​ அவன்தான் பீமன்! எதற்கும் கலங்காமல் அவன் ஆயுதத்துடன் நின்றான். அப்போது அஸ்வத்தாமன், நாராயண அஸ்திரத்தை மந்திரம் சொல்லி பாண்டவர் படை மீது ஏவினான். அந்த அஸ்திரத்தில் இருந்து பெரும் காற்றில் வேகமாகப் பரவும் தீயைப்போல, அக்னி ஜுவாலை வெளிப்பட்டது. அதிலிருந்து இடி முழக்கம் போல சப்தம் வெளிப்பட்டது. அந்த அஸ்திரம் பாண்டவப்படையை நெருங்கிய உடன், அனைவரும் அதன் மீது கை வைத்து மிகுந்த பக்தியுடன் வணங்கினார்கள். உடனே அந்த அஸ்திரம் பூமியை நோக்கிப் …

Mahabharatham story in Tamil 94 – மகாபாரதம் கதை பகுதி 94

மகாபாரதம் பகுதி-94​ கிருஷ்ணா! உனக்கு தெரியாதது ஒன்றுமல்ல. பொய் சொல்வதால் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், அன்பு, புகழ், செல்வம், பலம், பிரார்த்தனை பலன், தர்மம் முதலானவற்றால் சேர்த்த புண்ணியம்… இன்னும் எல்லாமே அழிந்து போகும் என்பது நீ அறியாததல்ல! மாயவனே! நீயே பொய் சொல்லத் துõண்டினால் உலகத்தில் தர்மம் என்னாகும்? என்றார் தர்மப்பிரபுவான தர்மராஜா. கடவுளே பொய் சொல்லத் துõண்டினாலும் கூட, அதிலுள்ள நியாய தர்மத்தை ஆராய்கிறான் மனிதனான தர்மன். மகாபாரதம் எவ்வளவு பெரிய நற்போதனையை மக்களுக்கு …

Mahabharatham story in Tamil 93 – மகாபாரதம் கதை பகுதி 93

மகாபாரதம் பகுதி-93 ​ அந்த வேலாயுதம் கடோத் கஜனின் மார்பைத் துளைத்து கொண்டு பறந்தது. மாபெரும் மலை சாயந்தது போல, கடோத் கஜன் தனது முகம் தரையில் படும் படியாக கீழே விழுந்து உயிர் விட்டான். இதுகண்டு பாண்டவர் படை அதிர்ச்சியடைந்தது. தங்களுடைய புத்திரன் இறந்தது குறித்து, பாண்டவர்களுக்கு பெரும் வருத்தம் உண்டானது. இப்போதும் கிருஷ்ண பரமாத்மாதான் பாண்டவர்களுக்கு கை கொடுக்க வேண்டியதாயிற்று. செயலிழந்து நின்ற பாண்டவர் களிடம், மைத்துனர்களே! விதிப் பயனை யாராலும் வெல்லமுடியாது. தத்துவ …

Mahabharatham story in Tamil 91– மகாபாரதம் கதை பகுதி 91

மகாபாரதம் பகுதி-91 ​ கண்ணபிரான் உடனே தனது பாஞ்சஜன்ய சங்கை ஊதினார். அதன் ஒலி கேட்டு களத்தில் நின்ற அனைவரும் அடங்கி நின்றனர். அப்போது, அர்ஜுனனிடம், அர்ஜுனா! கலங்காதே! இதோ இந்த வேலாயுதத்தை வைத்துக் கொள். முன்பொரு முறை பூமாதேவி இந்த வேலால் தான் நரகாசுரனைக் கொன்றாள். இது எத்தகைய கவசங்களையும் துளைக்கும் சக்தி வாய்ந்தது,என்று சொல்லிக் கொடுத்தார். அதைக் கொண்டு துரியோதனனை அர்ஜுனன் கொன்றிருக்கலாம், ஆனால், தன் அண்ணன் பீமன் செய்த சபதம் நினைவுக்கு வந்தது. …

Mahabharatham story in Tamil 90 – மகாபாரதம் கதை பகுதி 90

மகாபாரதம் பகுதி-90 ​ கிருஷ்ணரை அர்ஜுனன் வேகப் படுத்திக் கொண்டிருந்தான். விரைவாக தண்ணீர் குடித்துவிட்டு வரும்படி அவசரப்படுத்தினான். இவர்கள் குளம் உண்டாக்கி தண்ணீர் குடிப்பதை பார்த்த எதிரி வீரர்கள் கூட்டமாக வந்து சூழ்ந்தனர். அவர்களை எல்லாம் அர்ஜுனன் வீர சொர்க்கம் அனுப்பினான். இதையடுத்து துரியோதனன் தனது தேரில் வேகமாக அர்ஜுனனை நோக்கி வந்தான். அர்ஜுனனுக்கு ஆச்சரியமாக போய் விட்டது. கிருஷ்ணா! இந்த துரியோதனன் என் கண்களில் இன்று படவே இல்லை. வெகுதுõரத்தில் நின்று கொண்டிருந்தான். ஆனால், இப்போது …

Mahabharatham story in Tamil 89 – மகாபாரதம் கதை பகுதி 89

மகாபாரதம் பகுதி-89 ​ துரியோதனா! பிரம்மன் கூட சொன்ன சொல்லை சில சமயங் களில் காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதைப் போலத் தான் நானும்! ஜயத்ரதனைக் காப்பாற்றுவேன் என்று உன்னிடம் வாக்களிப்பதை விட செயலில் நிரூபிக்கவே விரும்புகிறேன், என்றதும், துரியோதனன் படை வீரர்களை நோக்கி, மிக மிக பணிவாக, நாளை ஒரே ஒரு நாள். ஜயத்ரதனைப் பாதுகாத்து விட்டால் அர்ஜுனன் அழிவான். அதன்பின் வெற்றி நம் பக்கம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள், என வேண்டிக்கொண்டான். கர்ணன், அஸ்வத்தாமன், …

Mahabharatham story in Tamil 88 – மகாபாரதம் கதை பகுதி 88

மகாபாரதம் பகுதி-88 ​ கடோத் கஜனுக்கு குழப்பமும் கோபமும் மேலிட்டது. இந்தப் பெரியப்பாவுக்கு என்னாச்சு! யாராவது எதிரியிடம் போய், நான் இன்னின்ன செய்யப் போகிறேன் என்று சொல்வார்களா? அவன் சுதாரித்துக் கொள்ள மாட்டானா? என்று யோசித்தவன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு, பெரியப்பா! தாங்கள் சொல்வது ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை. நம் வலிமை பற்றி எதிரிக்குத் தெரிந்தால் அது அவனுக்கு சாதகமாக அல்லவா ஆகி விடும். நம் பலத்தை நாமே குறைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? அதிலும் அபிமன்யுவை வஞ்சகமாகக் …

Mahabharatham story in Tamil 87 – மகாபாரதம் கதை பகுதி 87

மகாபாரதம் பகுதி-87 ​ அர்ஜுனா, மனதை திடமாக்கிக் கொள். என் அன்பு மருமகன், என் தங்கை சுபத்ரையின் புதல்வன் அபிமன்யு வீர சொர்க்கம் அடைந்தான், என்று நா தழுதழுக்க கிருஷ்ண பகவான் சொன்னதும், அர்ஜுனன் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. அவனது அழுகுரலும், புலம்பலும் கல் நெஞ்சத்தாரையும் கரைத்தது. மகனே! போய் விட்டாயா? தன் பேரனான உன்னோடு விளையாடி மகிழ உன் தாத்தா இந்திரனும் (இந்திரன் அர்ஜுனனின் தந்தையல்லவா?), பாட்டி இந்திராணியும் ஆசை கொண்டு, தேவலோகத்துக்கு இவ்வளவு விரைவில் …

Mahabharatham story in Tamil 86 – மகாபாரதம் கதை பகுதி 86

மகாபாரதம் பகுதி-86 ​ துரியோதனனுக்கு இப்போது இக்கட்டான நிலை. ஒரு சிறு பையன், இத்தனை பேரை அழிக்கிறான் என்றால், துரோணர், கிருபாச்சாரியார், கர்ணன், அஸ்வத்தாமன், சகுனி போன்ற மாபெரும் சக்திகளையெல்லாம் புறமுதுகோடச் செய்கிறான் என்றால், அர்ஜுனன், பீமன் போன்ற மகாசக்திகளுக்கெல்லாம் நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்ற கவலையுடன் நின்ற போது, மாவீரன் கர்ணன் அவன் முன்னால் வந்தான். துரியோதனன் அவனிடம், கர்ணா! அபிமன்யு நம்மவரை துவம்சம் செய்கிறான். இப்போது அர்ஜுனன் அவன் அருகில் இல்லை. அவனும், …