Mahabharatham story in Tamil 85 – மகாபாரதம் கதை பகுதி 85
மகாபாரதம் பகுதி-85 அவன் பல வலிமையான பாணங்களால் அபிமன்யுவைக் காயப்படுத்தினான். ஆனால், அபிமன்யு தன் உடலில் இருந்து கொட்டும் குருதி கண்டு மிகுந்த ஆனந்தமும் ஆவேசமும் அடைந்து கர்ணனை நோக்கி விட்ட அம்புகள் அவனை நிலைகுலையச் செய்தன. கர்ணன் தன் தேருடன் தோற்றோடினான். பின்னர் கிருபாசாரியார் அபிமன்யுவுடன் போர்செய்ய வந்தார். அத்துடன் சகுனி, அவனது மகன் ஆகியோர் அவனைச் சூழவே, கோபமடைந்த அபிமன்யு ஒரு பாணத்தை விட அது சகுனியின் மகனின் தலையை அறுத்தெறிந்தது. சகுனி …