Mahabharatham story in Tamil 67 – மகாபாரதம் கதை பகுதி 67
மகாபாரதம் – பகுதி 67 அவன் திருதராஷ்டிரனிடம், தந்தையே! தங்கள் ஆட்சியில் புதிய புதிய நடைமுறைகளைப் பார்க்க முடிகிறது. தூதனாக வந்தவர்களைக் கொன்ற அரசர்கள் எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற நல்ல யோசனைகள் எல்லாம் தங்கள் மனதில் எப்படித்தான் உதிக்கிறதோ தெரியவில்லை. பிராமணர்கள், பெண்கள், நோயாளிகள், புலவர்கள் ஆகியோரைக் கொல்வது பெரும்பாவம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த வரிசையில் தூதர்களும் இருக்கிறார்கள் என்பதை எப்படி மறந்தீர்கள்? இதனால், கொடிய நரகமல்லவா நமக்கு கிடைக்கும். அது மட்டுமா? …