Category «ஆன்மீக கதைகள் | Spiritual Stories»

Mahabharatham story in Tamil 81 – மகாபாரதம் கதை பகுதி 81

மகாபாரதம் பகுதி – 81​காரணம் இல்லாமல் கடவுள் காரியம் எதையும் செய்வதில்லை. கிருஷ்ண பகவானின் சங்கொலி, போர் வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் அதிபயங்கர சப்தமாய் ஒலிக்க, பீஷ்மரின் காதில் அது தேனாய் பாய்ந்தது. உயிர் போகும் தருணத்தில் மனிதனுக்கு பயம் ஏற்படுவது இயற்கையே. எப்படி உயிர் போகிறதோ, அதற்கு தகுந்தாற் போன்ற வலியும் ஏற்பட்டு துடிக்க வைக்கும். பீஷ்மரின் உடலில் அர்ஜுனன் பாய்ச்சிய ஏராளமான அம்புகள் பெரும் வலியை உண்டாக்கியது. அந்த மகாத்மா அதைப் பொறுத்துக் கொண்டார். …

Mahabharatham story in Tamil 80 – மகாபாரதம் கதை பகுதி 80

மகாபாரதம் பகுதி – 80​அப்போது அசுரன் அலம்புசன் மிகப்பெரிய பாறை ஒன்றைத் துõக்கி பீமன் மீது வீசினான். அதை அபிமன்யு தனது அம்பால் தடுத்து நிறுத்தி பொடிப் பொடியாக்கினான். அபிமன்யுவின் இந்த வீரம் கண்டு களித்த பீமன், இன்னும் ஆக்ரோஷமாக போரிட்டான். அலம்புசன் மீது தன் கையில் இருந்த வேல்கம்பு ஒன்றை எறிந்து கொன்றான். அலம்புசன் இறக்கவே, அவனுடன் இருந்த அசுர வீரர்கள் பயந்து சிதறினர். பீமன் அவர்கள் ஒருவர் விடாமல் கொன்றதுடன், துரியோதனனின் ஆதரவாளர்களான வடதேசத்து …

Mahabharatham story in Tamil 79 – மகாபாரதம் கதை பகுதி 79

மகாபாரதம் – பகுதி 79 அலம்புசனுக்கும் அரவானுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. நாக வடிவ அரவானை ஏதும் செய்ய முடியாததால், மாயையில் சிறந்த அலம்புசன் கருட வடிவம் எடுத்தான். கருடனைக் கண்டால் நாகம் அஞ்சுவது இயற்கை தானே! அரவான் அதிர்ச்சியடைந்தான். தன் பலத்தையெல்லாம் இழந்து நின்ற வேளையில் இதுதான் சமயமென அவனை வாளால் வெட்டி வீழ்த்தினான் அலம்புசன். அரவானின் மரணம் கவுரவ சேனைக்கு புதிய ஆற்றலைத் தந்தது. அரவான் மடிந்தான், அலம்புசன் வாழ்க, துரியோதன மாமன்னர் வாழ்க என்ற …

Mahabharatham story in Tamil 78 – மகாபாரதம் கதை பகுதி 78

மகாபாரதம் – பகுதி 78 சல்லியனைக் காப்பாற்றும் விதத்தில், துரியோதனன் பீமனுடன் கடும் யுத்தம் செய்தான். இருவரும் மோது வதைப் பார்த்து பீமனின் மகன் கடோத்கஜன் வந்தான். அவனோடு கவுரவப்படைகள் மோதின. ஆனால், இந்த இருவரின் பலத்தின் முன்பு துரியோதனின் படைகளால் ஏதும் செய்ய முடியவில்லை. அவர்கள் பயத்தில் புறமுதுகிட்டு ஓடினர். அப்போது, துரியோதனின் தம்பி விகர்ணன் பாண்டவர் படைகளை ஒரு இடத்தில் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான். இதைப்பார்த்து விட்ட அபிமன்யு, அவனோடு கடும் யுத்தம் …

Mahabharatham story in Tamil 77 – மகாபாரதம் கதை பகுதி 77

மகாபாரதம் – பகுதி 77 பரந்தாமா ! என்ன இது விபரீதம்! சாரதியாய் வந்த நீர், இவ்வாறு போர்க்கோலம் பூணுவது நீதியாகுமா? எதிர்த்திசையில் இருப்பவர்கள் எனது உற்றார், உறவினர் என்பதால் தானே, நான் தயக்கத்துடன் போர் புரிகிறேன். இல்லாவிட்டால், என் பாணங்கள் இதற்குள் எதிரிகளின் தலைகளைக் கொய்திருக்காதா! கேசவா! சினம் தணிந்து என் தேரில் மீண்டும் ஏறும். அபிமன்யுவும், பீமனும் தங்களைக் காத்து கொள்ளும் திறமை வாய்ந்தவர்கள். பீஷ்மரால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் கூட நான் மகிழத்தான் …

Mahabharatham story in Tamil 76 – மகாபாரதம் கதை பகுதி 76

மகாபாரதம் – பகுதி 76 படையினர் பின்னேறினாலும், பீமன் சற்றும் தயங்காமல் முன்நோக்கி சென்றான். கவுரவர்களின் காலாட்படைகளை தன் காலால் மிதித்தே கொன்று தீர்த்தான். இதைப் பார்த்த துரியோதனன் ஆத்திரத்துடன் பீமன் அருகில் வந்தான். அவனுக்கு துணையாக பல நாட்டு ராஜாக்களும் வந்தனர். பீமன் அவர்களது தேர்களை தன் புஜபலத்தாலேயே அடித்து நொறுக்கினான். அந்த ராஜாக்களை தன் கதாயுதத்தால் கொன்று போட்டான். பின்னர் துரியோதனனின் தேரை தன் பலம் கொண்ட மட்டில் தூக்கி வீசினான். துரியோதனன் இறந்துவிட்டானோ …

Mahabharatham story in Tamil 75 – மகாபாரதம் கதை பகுதி 75

மகாபாரதம் – பகுதி 75 பீஷ்மருக்கு அவர் நினைத்தாலொழிய மரணம் வராது என்ற வரத்தைப் பெற்றிருந்தார். யாராலும் அவரை வெல்லமுடியாது. இந்த நிலையில் அவரை எப்படி கொல்வது என்பதை அடிப்படையாக வைத்தே இந்த கேள்வியை கிருஷ்ணர் கேட்டார். இதற்கான பதில் அர்ஜுனனுக்கு தெரியவில்லை. எனவே கிருஷ்ணரே பீஷ்மர் அருகில் தனது தேரை ஓட்டிச் சென்றார். பீஷ்மரே! இது போர்க்களம். ஆனால் உமக்கு மட்டும் அழிவு கிடையாது என்பதை நான் அறிவேன். போர்க்களத்திற்கு வந்தபிறகு வெற்றி தோல்வி என்பதை …

Mahabharatham story in Tamil 74 – மகாபாரதம் கதை பகுதி 74

மகாபாரதம் – பகுதி 74 பின்பு அனைவரும் காளி கோயிலுக்கு புறப்பட்டனர். அங்கு அரவான், முகமலர்ச்சியுடன் நின்றான். மரணத்தைக் கண்டு அஞ்சாமல், முக மலர்ச்சியுடன் வரவேற்பவர்கள், சொர்க்கம் அடைவர். காளியின் முன்பு நின்ற அரவான், ஜெய் காளிமாதா! என்னை ஏற்றுக் கொள், என்றவனாய், தன் தலையை தானே சீவினான். அரவானின் களப்பலிக்கு பிறகு கிருஷ்ணரும் பாண்டவர்களும் தங்கள் படைத்தலைவர் ஸ்வேதனை வரவழைத்தார்கள். ஸ்வேதனின் தலைமையில் பீமன், அர்ஜுனன், அபிமன்யு ஆகியவர்களைக் கொண்ட அதிரதப்படையும், சிகண்டி, சாத்தகி, விராடராஜன், …

Mahabharatham story in Tamil 73 – மகாபாரதம் கதை பகுதி 73

மகாபாரதம் – பகுதி 73 மாயங்கள் புரிவதில் வல்லவரான கிருஷ்ணரின் யோசனையில் உதித்தது ஒரு திட்டம். அமாவாசையன்று அரவானை களபலி கொடுத்தால், கவுரவர்களின் வெற்றி உறுதியாகி விடும். எனவே, அமாவாசையையே மாற்றி விட்டால் என்ன! அதெப்படி முடியும், கிரகங்களின் சஞ்சாரத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும்! கடவுளால் அது முடியும். ஏனெனில், கிரகங்கள் அவரால் படைக்கப்பட்டவை. அவர் சொல்வதைக் கேட்டு நடப்பவை. கிருஷ்ணர், நாராயணனின் அம்சம் தான். கடவுள் தான்! இருப்பினும், இப்போதைக்கு அவர் பூமியில் மனிதனாக பிறந்திருக்கிறாரே! …