Mahabharatham story in Tamil 90 – மகாபாரதம் கதை பகுதி 90
மகாபாரதம் பகுதி-90 கிருஷ்ணரை அர்ஜுனன் வேகப் படுத்திக் கொண்டிருந்தான். விரைவாக தண்ணீர் குடித்துவிட்டு வரும்படி அவசரப்படுத்தினான். இவர்கள் குளம் உண்டாக்கி தண்ணீர் குடிப்பதை பார்த்த எதிரி வீரர்கள் கூட்டமாக வந்து சூழ்ந்தனர். அவர்களை எல்லாம் அர்ஜுனன் வீர சொர்க்கம் அனுப்பினான். இதையடுத்து துரியோதனன் தனது தேரில் வேகமாக அர்ஜுனனை நோக்கி வந்தான். அர்ஜுனனுக்கு ஆச்சரியமாக போய் விட்டது. கிருஷ்ணா! இந்த துரியோதனன் என் கண்களில் இன்று படவே இல்லை. வெகுதுõரத்தில் நின்று கொண்டிருந்தான். ஆனால், இப்போது …