முகுந்த மாலா 25 | Mukunda Mala Stotram 25 in Tamil with Meaning
அம்னாயாப்⁴யஸனான்யரண்யருதி³தம் வேத³வ்ரதான்யன்வஹம்
மேத³ஶ்சே²த³ப²லானி பூர்தவித⁴ய꞉ ஸர்வே ஹுதம் ப⁴ஸ்மனி |
தீர்தா²னாமவகா³ஹனானி ச க³ஜஸ்னானம் வினா யத்பத³-
த்³வந்த்³வாம்போ⁴ருஹஸம்ஸ்ம்ருதிர்விஜயதே தே³வ꞉ ஸ நாராயண꞉ || 25 ||
விளக்கம்:
எவருடைய திருவடித் தாமரைகளின் ஞாபகத்தை தவிர்த்துவிட்டு வேதங்களைப் பயிற்சி செய்தல் காட்டுக்கு கதறலாகுமோ தினந்த்தோறும் (செய்யும்) வேதங்களில் கூறிய விரதங்கள் உடலிலுள்ள கொழுப்புநீர் அகல்வதாகிய பலனை உடையதாகுமோ கிணறுக்குளம் வெட்டுவது போன்ற காரியங்கள் அனைத்தும் (நெருப்பில்லாத) சாம்பலில் ஹோமம் செய்யப்பட்டதாக ஆகுமோ தீர்த்தங்களில் மூழ்குதலும் யானைகள் மூழ்குவதற்கு ஒப்பாகுமோ அந்த பகவான் வெற்றிகொள்கிறார்.