இரு கருப்பண்ண சாமியே | Iru Karuppanna Samiye
தாராளமாகவே உந்தன் பொற்கோவிலை
தடையின்றி வலமதாகி
தாள்வினைகள் துதி செய்து போற்றி
அபிஷேகமும் சாம்பிராணி தூபமிட்டும்
ஏராளமாகவே கற்பூர தீபமும்
எடுக்கின்ற தீப ஒளியும்
இலங்கு மலர் அர்ச்சனை புஜைகள்
செய்துமே எப்போதும் ஏற்றி நிற்பேன்.
காராண குலவிளக் கிராமலிங்கேந்திலன்
கருது மொழி தவரிடாமல்
காத்தருள் செய்திடு வாத்தி அண்ணாமலை
கவிஞன் ஈரைந்து கவியால்
வாராத செல்வமும் வந்திட அருள்செய்யும்
வல்லையம் பதியில் மேவும்
மலைமீதில் அய்யனார் சந்நிதியில்
எந்நாளும் வாழ் கருப்பண்ணசாமியே
கருப்பனே துணையென்று இருப்பவர்கள்
நெஞ்சினில் காணாத காட்சி காணும்
கருணை சேரும்பதியை நோக்கி வருவோர்கள்
முறை கலங்கியே பாய்ந்தோடிடும்
மருப்படா மேனியாய் உன்பதம் சேவிக்க
மனத்தில் ஒரு துயர் தீர்ந்திடும்.
வாழ்வு வரும் நின்னுடைய கொலுமுகம்
காணவே மைந்தனொடு செல்வமுண்டாம்
கட்டாரில் வில் அம்பு கையினில் பந்தமும்
கலகலவென ஓசைஅதிரும்
காலிட்ட தண்டையும் நேரில்வரும் கச்சையும்
கனமான தொங்கல் அழகும்
வட்டமிடும் நெற்றியில் கஸ்தூரி பொட்டுடன்
மார்பில் பதைக்கமாட
வருடம் ஒரு நாளிலே பெரும்பூஜை
தனிலே வருகுவாய் கரியவண்ணா
இட்டமுடன் ஆசிரிய விருத்தமாய்
இயம்பினேன் எழிலார்ந்த கரிய மணியே
ஏக உல்லாசனே கொரட்டிதனில்
வாழ்கின்ற இருகருப்பண்ண சாமியே.