திருவோணம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

திருவோணம்/ஓணம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்:

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.