Viruchigam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் விருச்சிகம்

Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள்

நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் கிரகங்கள் ராகுவும் கேதுவும். இவ்விரு நிழல் கிரகங்களுக்கு தனி வீடுகள் என்பது கிடையாது. ஆகவே இந்த கிரகங்கள் 12 ராசி வீடுகளில் எந்த வீட்டில் இருக்கின்றனரோ அந்த வீட்டின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வார்கள்.

போக காரகனான ராகுவும்,ஞான காரகன் ஆன கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து இருக்கின்ற வீடுகளுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள்.

அந்தவகையில், ராகு பகவான் தற்போது மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்,
கேது பகவான் தற்போது துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.

சர்ப்ப கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள். அத்தகைய ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 விருச்சிக ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை அளிக்கப் போகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Viruchigam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, இவ்வருடம் நிகழும் ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 வரை உங்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் வாக்கு வாதத்தை குறைப்பது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இயல்பாகவே நீங்கள் அதிக புத்தி கூர்மையும் சமூகப்பற்றும் கொண்டவர்களாக இருப்பீர்கள். சமுதாயத்தில் கௌரவ பதவிகள் தேடி வரும். கடந்த காலங்களில் குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து. நெருங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமைந்து ஏற்றம் அடைவீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் தைரியத்துடன் செயல்படும் திறன், உங்களின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேறும் வாய்ப்புகள் வரும் நாட்களில் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – விருச்சிகம் உத்தியோகம்/வேலை எப்படி இருக்கும்

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மனநிம்மதியை ஏற்படுத்தும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகி திறமைகளை வெளிக்காட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடம் மாற்றங்களை அமையும். எடுக்கும் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வேலைக்காக செல்லும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – விருச்சிகம் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

உடல் ஆரோக்கியத்தில் இருந்த சொல்ல முடியாத பிரச்சனைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாகவும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோனியம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்ப தேவைகள் யாவும் தடை இன்றி பூர்த்தியாகும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – விருச்சிகம் தொழில் முன்னேற்றம் எப்படி இருக்கும்

தொழில் அல்லது வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். வெளியூர் தொடர்புகளால் மேன்மைகளை அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை சரளமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் சாதகமான நிலையினை அடைய முடியும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – விருச்சிகம் அரசியல்வாதிகளுக்கு எப்படி இருக்கும்

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரக்கூடிய காலமாக இருக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – விருச்சிகம் விவசாயிகளுக்கு எப்படி இருக்கும்

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமையும். நீர்வரத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புது மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் உண்டு.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – விருச்சிகம் கலைஞர்களுக்கு எப்படி இருக்கும்

கலைஞர்களுக்கு எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கும். எனவே, உங்களின் நடிப்புத் திறனால் மிகப்பெரிய உச்சத்தை அடைவீர்கள். சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. புதிய முதலீடுகளில் அனுகூலம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன்கள் சற்று குறையும். இசைத்துறையில் உள்ளவர்களுக்கும் சாதிக்க கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடி வரும்

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – விருச்சிகம் பெண்களுக்கு எப்படி இருக்கும்

பெண்களுக்கு இருந்து வந்த உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோனியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – விருச்சிகம் மாணவர்களுக்கு எப்படி இருக்கும்

மாணவர்களுக்கு இருந்த மந்த நிலை முழுமையாக விலகும். கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவதால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள். மேற்கில்விக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1,2,3,9.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்டக்கல்: பவளம்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

விருச்சிகம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி 2023- 2025 பரிகாரம்:

  • நீங்கள் அனுதினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
  • செவ்வரளி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும்.
  • விநாயகரை சதுர்த்தி விரதம் இருந்து வழிபடலாம்.
  • கருப்பு எள் மற்றும் சித்திரங்கள் உள்ள வண்ணமயமான போர்வைகளை ஏழைகளுக்கு தானமாக தரலாம்.
  • குலதெய்வ வழிபாடும் நன்மை பயக்கும்.
  • படிக்கும் குழந்தைகளும் படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்யலாம்.
  • முன்னோர்கள் வழிபாடு நன்மை பயக்கும்.
  • தினமும் தியானம் செய்வது மிகவும் நல்லது.

ராகு கேது பெயர்ச்சி 2023, 2024 எப்போது