திருச்செந்தூரின் செந்தில் முருகா
இசைக் கோவிலில் குடி கொண்டவா
கடலலையோரம் நின்று அருள்செய்பவா
ஓம் சரவணபவ சரணம் (திரு)
தேவர் வணங்கிட சூரர் பொடிபட வேலை எறிந்தேகாத்தாய்
மாந்தர் பணிந்தே வேண்டும் வரங்களை வழங்கியதினம் காத்தாய்
ஞானவேலா ஞானத்தின் தலைவா
ஔவைபோற்றிய மெய்யான தேவா
சிவசக்தி பாலனே வரம் தரவா (திரு)
வண்ணமயில் மீதுஏறி என் எண்ணம் போலே வருவாய்
பன்னிரு விழிப்பார்வையாலே அருளை அள்ளித் தந்திடுவாய்
செல்வனே இசை நாதத்தின் ஸ்ருதியே
வீரனே வெற்றிவேல் ஏந்தும் சீலனே
ஐங்கரனின் சோதரனே ஆறுதலை தா (திரு)