ஆடுக ஊஞ்சல் ஆடுகவே | Aaduga Oonjal Adugave Lyrics

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே | Aaduga Oonjal Adugave Lyrics

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா தாயே ஆடுகவே (ஆடுக)

அம்மா மதுரை மீனாட்சி
அருள்வாய் காஞ்சி காமாட்சி
அன்பாய் என்னை ஆதரித்து
அல்லல் போக்கும் என் தாயே

அன்னை தேவி பராசக்தி
என்னை படைத்தது உன் சக்தி
வாழ்வை தந்து வளம் தந்து
வாழ்க்கை கடலில் கரையேற்று(ஆடுக)

கலியுகம் காக்கும் கண்மணியே
கண்களில் இருக்கும் கருமணியே
நீ வாழும் உந்தன் ஆலயத்தில்
வந்தவர்க்கெல்லாம் நலம் பெருகும்
ஓம்காரப்பொருள் நீ தானே
உலகம் என்பதும் நீ தானே
காணும் இயற்கை காட்சிகளும்
காற்றும் மழையும் நீ தானே (ஆடுக)

அம்மா தாயே உனை வேண்டி
அழுதிடும் என்னை தாலாட்டி அன்புடன் ஞானப் பால் ஊட்டி
அகத்தின் இருளைப் போக்கிடுவாய்

உள்ளக் கோவில் உன் கோவில்
உயிரும் மூச்சும் உன் வடிவம்
பேச்சும் செயலும் உன் செயலே
பெரு கட்டும் உந்தன் பேரருளே(ஆடுக)

Madurai Meenakshi Amman Chithirai Thiruvizha Images

Madurai Meenakshi Amman Images

Meenakshi Amman Images

காமாட்சி அம்மன் விருத்தம் வரிகள் | Kamatchi Amman Virutham Lyrics in Tamil

Madurai Meenakshi Amman Devotional Song in Tamil