ஆடும் கரகம் எடுத்து | Aadum Karagam Eduthu Aadi Varuvom

ஆடும் கரகம் எடுத்து | Aadum Karagam Eduthu Aadi Varuvom

ஆடும் கரகம் எடுத்து ஆடி வருவோம்
அம்பிகையே உன் புகழை பாடி வருவோம்
ஆடியிலே பூஜை வைத்து அடி பணிவோம்
ஆலயத்தின் வாசலிலே கூடி மகிழ்வோம்
பூலோக மாரி உனக்கு மாலையிடுவோம்
தங்க கரகம் எடுத்து ஆடிவருவோம்
வீரபத்ரகாளி உனக்கு பொங்கல் இடுவோம் (பூவால்)

சமயபுரம் சக்தி உன்னை போற்றி வருவோம்
சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம்
வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம்
வேப்பிலை கரகம் எடுத்து வணங்கி வருவோம் (பூவால்)
வெள்ளி கரகம் எடுத்து ஆடி வருவோம் எங்க
கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம்
நார்த்த மலை அன்னை உன்னை நாடி வருவோம் – நல்ல
நன்மையெல்லாம் கூடி வர நலம் பெறுவோம் (பூவால்)