கண்ணபுர நாயகியே மாரியம்மா | Kannapura Nayagiye Mariyamma Song Lyrics in Tamil
கண்ணபுர நாயகியே மாரியம்மா – நாங்க
கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா
கண் திறந்து பார்த்தாலே போதுமம்மா – எங்க
கவலை எல்லாம் மனச விட்டு நீங்குமம்மா (கண்ணபுர)
உத்தமியே உன் அருளை நாடி வந்தோம்
பம்பை உடுக்கையோடு உன் மகிமை பாடி வந்தோம்
பச்சிலையில் தேரெடுத்து வரவேண்டும் – உன்
பக்தருக்கு வேண்டும் வரம் தரவேண்டும் (கண்ணபுர)
வேப்பிலையால் நோயெல்லாம் தீர்த்திடுவாய்
மனவேதனையை திருநீற்றால் மாற்றிடுவாய்
காப்பாற்ற சூலம் அதை எந்திடுவாய் – தினம்
கற்பூர ஜோதியிலே வாழ்ந்திடுவாய் (கண்ணபுர)
மலையேறும்தாய் உனக்கு கும்பமிட்டோம்
அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலிட்டோம்
உலகாளப் பிறந்தவளே அருள் தருவாய் – எங்க
வீடெல்லாம் பால் பொங்க வரம் தருவாய் (கண்ணபுர)
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா (ஈஸ்வரி)
சமயபுரம் சன்னதியின் வாசலிலே
லோக சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய்
நாங்க கொண்டாட வந்ததற்கும் பலன் கொடுப்பாய் (ஈஸ்வரி)
வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய்
சிங்க வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் – இந்த
உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய் (ஈஸ்வரி)
வடவேட்டு எல்லையிலே குடி இருப்பாய்
நல்ல பத்தினிகள் மஞ்சளுக்கு துணை இருப்பாய்
மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே – அதை
குங்கமமாய் தரவேணும் நெத்தியிலேல (ஈஸ்வரி)