கருணை உள்ளம் கொண்டவளே | Karunai Ullam Kondavale Karumariamma
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா – உன்
கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மா
அருள் மாரியம்மா – அம்மா (கருனை)
கரகம் எடுத்து ஆடி வந்தோம்
காணிக்கை செலுத்த நாடி வந்தோம்
கரங்கள் குவித்து பாடி வந்தோம்
வரங்கள் குறித்து தேடி வந்தோம் – அம்மா (கருனை)
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்
முத்துமாரி உனை பணிந்தோம்
பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் – அம்மா (கருனை)
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் – அம்மா
அம்மா எங்களுக் கருள் வந்தாய்
புன்னகை முகம் கொண்டவளே
பொன்மலர் பாதம் தந்தவளே – அம்மா (கருனை)