கருணை வடிவானவளே | Karunai Vadivaanavale Karam Kuvithom

கருணை வடிவானவளே | Karunai Vadivaanavale Karam Kuvithom

கருணை வடிவானவளே கரம் குவித்தோம் அம்மா
கவலை யெல்லாம் தீர்த்து ஆளும் கருமாரி அம்மா
அருள் பொழியும் ஆயிரம் கண்ணுடைய தாயே – உந்தன்
அடிமைகளை காத்தருள்வாய் அனுதிமும் நீயே (கரு)

புரிந்தும் புரியாது செய்த
பெரும் பிழைகள் இல்லாம்
பொறுத் தருள வேண்டும் உந்தன்
பொன்னடியை வணங்குகிறேன்
மகிமை பல செய்து வரும்மகா சக்தி அன்னை – இந்த
மெய் தலத்தில் அவதரித்தான் என்ற வார்த்தை உண்மை (கரு)

தேசமெல்லாம் போற்றி வருந் தேவி எங்கள் கருமாரியம்மா
ஈஸ்வரியே இன்பமெல்லாம் தந்தருள்வாய் கருமாரி
மாசுகளை நீக்கிடுவாய் மங்கள குணமாரி
மனிதர் குல தெய்வமாய் விளங்கும் உபகாரி (கரு)