காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா | Katchi Thanthu Ennai Lyrics
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா
கல்யாணியே கற்பகமே அற்புத (காட்சி)
மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திடக் கனிவுடன்
மன்றிலே நின்று ஆடும் அம்பலவாணருடன் (காட்சி)
அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயே
ஆனந்த மாமலையில் தேமதுரக் கனியே
மங்கலக் குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையே
மரகத மயில் உருவத் தேவியே தவத்திரு (காட்சி)