மாரியம்மா மாரியம்மா | Mariamma Mariamma

மாரியம்மா மாரியம்மா | Mariamma Mariamma

மாரியம்மா மாரியம்மா மாரியம்மா
தேவி கருமாரியம்மா தேடி வந்தோம் உன்னையம்மா
தேவி கருமாரியம்மா தேடி வந்தோம் உன்னையம்மா
ஆவலுடன் உனைப் பணிந்தோம்

நாவாரப் பாடவந்தோம் ஆவலுடன் உனைப்பணிந்தோம்
மேவி வரும் கருணை மனம் கொண்டவளும் நீ அம்மா
தாவி வரும் சிங்கத்தின் மேல் அமர்ந்தவளும் நீ அம்மா
பாவி என்று இகழாமல் பாசமலர் தாருமம்மா

பூவிருந்தவல்லியில் வாழ் புண்ணியவதி நீ அம்மா
பூவிருந்தவல்லியில் வாழ் புண்ணியவதி நீ அம்மா

சித்திரை பல்லக்கில் ஏறி வந்தாள் … அவள்
சிங்காரமாகவே ஆடி வந்தாள்
முத்துப் பல்லக்கினில் ஏறி வந்தாள்… அவள்
முந்தை வினை நீக்க ஓடி வந்தாள்

வேலனுக்கு வேல் கொடுத்தாள் வேற்காட்டு மாரியம்மா
காலனையும் ஓட வைப்பாள் காளி கருமாரியம்மா
சீலருடன் வந்திடுவாள் நீலி கருமாரியம்மா
சூலமதை தந்திடுவாள் சுகம் தரும் மாரியம்மா
சூலமதை தந்திடுவாள் சுகம் தரும் மாரியம்மா