முத்துமாரி அம்மனுக்கு | Muthumari Ammanukku Song Lyrics in Tamil
முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம் (முத்து)
பாலோடு பன்னீரும் அபிஷேகமாம் – அவள்
பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்
மங்கலக் குங்குமத்தில் திலகமாம் – அவள்
மஞ்சள் நிற ஆடை கட்டி வந்திடுவாளாம் (முத்து)
திரிசூலம் கையில் கொண்ட திரிசூலியாம் – அவள்
திக்கெட்டும் காத்து வரும் காளியம்மனாம்
கற்பூரச் சுடரினிலே சிரித்திடு வாளாம் – அவள்
தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாளாம் (முத்து)
சர்க்கரையில் பொங்கலிட மகிழ்ந்திடுவாளாம்
நெய் விளக்கேற்றி வணங்கிடவே வரம் தருவாளாம்
முழங்கி வரும் முரசங்களை கேட்டிடுவாளாம் – அவள்
முன்னின்றே நல்லருளைத் தந்திடுவாளாம் (முத்து)