புன்னை நல்லூர் மாரியம்மா | Punnai Nallur Mariyamma

புன்னை நல்லூர் மாரியம்மா | Punnai Nallur Mariyamma

புன்னை நல்லூர் மாரியம்மா
புவனம் போற்றும் தேவியம்மா
கண் திறந்து எங்களையே
கொஞ்சம் நீயும் பாருமம்மா (புன்னை)

அன்புடனே ஆடிவரும் ஆத்தாளே பாளையத்தம்மா
கண்ணிமை போல் காப்பவளே கண்ணபுரம் காளியம்மா
உடுக்கையிலே இந்த உலகமெல்லாம்
ஒரு நொடியினிலே படைத்தவளே
ஓங்காரி உன் தங்கக்கையால் திரிசூலம் தனை எடுத்தவளே
அம்மா படவேட்டில் திருக்கோவில் கொண்டு
அடியவர்க்கே அருள் கொடுப்பவளே
பம்பையும் மேளமும் முழங்கி
பவனி வந்திடும் மஞ்சள் முகத்தாளே (புன்னை)

பொன்னாத்தா முண்டகக் கன்னி சமயபுரத்தா மகமாயி
உன்னைத்தான் நம்பி வந்தோம் சின்னாத்தா வெக்காளி
தண்டை சிலம்பு கொஞ்சிடவே ஆடி வரும் பன்னாரி
தென்காளி எல்லம்மா கங்கையம்மா தில்லைக்காளி
மருவத்தூரில்கோவில் கொண்டு மகிமை எல்லாம் புரிந்தவளே
திருவாச்சூரில் மதுரகாளியாய் மலையின் மீது நின்றவளே
மேல்மலையனூரிலே வாழும் எங்கள் அங்காளம்மா திரிசூலி
திருமயிலையிலே களி நர்த்தனமாடும்
ஆனந்த தாண்டவ மாகாளி (புன்னை)