செவ்வரளிப் பூவெடுத்து சிந்தையிலே | Sevvarali Poo Eduthu Song Lyrics in Tamil
செவ்வரளிப் பூவெடுத்து சிந்தையிலே உன்னை வைத்து
செந்தமிழில் சொல்லெடுத்து நான்பாடுவேன்… அம்மா
சித்துவிளையாடிடவே வருவாய் அம்மா
கைநிறைய பூவெடுத்து கண்களுக்குள் உன்னைவைத்து
கன்னித்தமிழ் சொல்லெடுத்து நான்பாடுவேன்… அம்மா
கருணைமழை பொழிந்திடவே வருவாய் அம்மா
பந்தமுண்டு பாசமுண்டு சொந்தமுண்டு சுற்றமுண்டு
அத்தனையும் மறந்துஉனை நான்பாடுவேன்…அம்மா
ஆறுதலைத் தந்திடவே வருவாய் அம்மா
நெற்றியிலே திலகம்வைத்து நெஞ்சமதில் உன்னைவைத்து
நித்த நித்தம் உன்புகழை நான் பாடுவேன்… அம்மா
நிம்மதியைத் தந்திடவே வருவாய் அம்மா
பச்சரிசிப்பொங்கல் வைத்து பக்தியுடன் பூஜை செய்து
பழகு தமிழ்ச் சொல்லெடுத்து நான்பாடுவேன்… அம்மா
பங்காரு வடிவத்திலே வருவாய் அம்மா
மனமென்னும் மேடையிலே மகராசி உன்னைவைத்து
மாதா உன்திருப்புகழை நான்பாடுவேன்… அம்மா
மந்திருப்பு நடத்திடவே வருவாய் அம்மா
அழகான கலசம் வைத்து அருகிலொரு தீபம் வைத்து
அன்னை உந்தன் திருப்புகழை நான்பாடுவேன்…. அம்மா
அருள்வாக்கு தந்திடவே வருவாய் அம்மா