ஸ்ரீ தையல் நாயகி பாடல் | Sri Thaiyal Nayagi Song Lyrics in Tamil
தையல் நாயகி அம்மா தையல் நாயகி என்றும் தாயாக இருப்பவளே தையல் நாயகி
ஊர் உலகம் காப்பவளே தையல் நாயகி உன்பாதம் சரணடைந்தேன் தையல் நாயகி
குங்குமத்தில் ஒளிவீசும் தையல் நாயகி குமரனுக்கே தாயுமானாய் தையல் நாயகி
வைத்தியத்தின் சிகரமாய் தையல் நாயகி
வைத்திய நாதனுக்கே துணையுமானாய் தையல் நாயகி
மணமுடிக்க கேட்டுக் கொண்டால் தையல் நாயகி
மங்களமாய் முடித்து வைப்பாள் தையல் நாயகி
மழலைச் செல்வம் வேண்டுமென்றால் தையல் நாயகி
மகிழ்ச்சியுடன் தந்திடுவாள் தையல் நாயகி
அம்மா என்றே உனை அழைத்தாள் தையல் நாயகி
ஆறுதலே பிறக்குதம்மா தையல் நாயகி
தாயே என்று உனை அழைத்தால் தையல் நாயகி
நோய் நொடிகள் நீங்குதம்மா தையல் நாயகி
அம்மா என்றே உனை அழைத்தால் தையல் நாயகி
அடிபணிந்தேன் உந்தன் பிள்ளை தையல் நாயகி
என்னகுறை எனக்கினிமேல் தையல் நாயகி
எனக்கு துணை நீ யிருக்க தையல் நாயகி
தையல் நாயகி அம்மா தையல் நாயகி
தாயாக இருப்பவளே தையல் நாயகி
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ் ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாமஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி ஏம ஜோதி வியோம ஜோதி யேறு ஜோதி வீறு ஜோதி ஆதி ஜோதி யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே.