Ange Idi Mulankuthu – Lord Karuppasamy Songs

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது – மகாலிங்கம்
மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
வெள்ள நல்ல குதிர மேலே
வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட
வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி

மலையாளம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி
சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி (அங்கே இடி)

கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி
செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார்.
அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
18ம்படி கருப்பசாமி ஆடிவாரான் கருப்பசாமி
முனியம்மா
தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்
கோன நல்ல கொண்ட போட்டு
கோத்த முத்து பல்லழகன் – கொடிய
வேட்டை யாடியல்லோ வாரார் அங்கே கருப்பசாமி (அங்கே இடி x 2)

18ம்படி கருப்பசாமியே போற்றி