துர்க்கை துதி
ஞாயிற்றுக்கிழமை நாள்தோறும் மங்கையர் யாவரும் கூடிடுவோம்
எலுமிச்சை தீபத்தை ஏற்றிடுவோம் மகிழ்ச்சியுடன் பூஜை செய்திடுவோம்
நாம் இனிமையுடன் வரம் கேட்டிடுவோம் (ஞாயிற்றுக்கிழமை)
பலப்பல மலர்களை பறித்திடுவோம்
பலப்பல பூஜைகளை செய்திடுவோம்
பலப்பல வரங்களை கேட்டிடுவோம்
ஏகாம்பர துர்க்கையை துதித்திடுவோம்
சுந்தர வதனி மீனாட்சி சுகுண மனோகரி காமாட்சி
விஜயம் தருவாள் விசாலாட்சி
வீணையை மீட்டுவாள் சரஸ்வதி (ஞாயிற்றுக்கிழமை)
ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்
லலிதாம்பிகையே நமஸ்காரம்
துர்க்கா லக்ஷ்மியே நமஸ்காரம்
புவனேஸ் வரியே நமஸ்காரம்
அன்னபூர்ணேஸ்வரியே நமஸ்காரம்
காமேஸ்வரியே நமஸ்காரம்
பக்தியுடனே உன்னை நாடி வந்தோம் நாங்கள்
பண்புடனே உன்னைப் பார்க்க வந்தோம் (ஞாயிற்றுக்கிழமை)
வருவாய் வருவாய் நீயம்மா
தருவாய் தருவாய் சுகம் தருவாய்
அம்மா நீ எம்மை கை விடாமல்
ஆசிகள் கூறி அனுப்புவாயே
ஏகாம்பரேஸ்வரி என்றும் நீயே
ஏழை என்னை ஏற்றுக்கொள்வாய்
என்றும் உன்னை மறவேனே என்னை
ஏகாந்த முடனே ஏற்றுக்கொள்வாய்
அம்மா தாயே சரணமம்மா
அன்பால் என்னை அணைத்துக் கொள்வாய்
ஆதிபராசக்தி நீயம்மா
அருளைக் கொடுத்து காப்பாய் (ஞாயிற்றுக்கிழமை)