கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி
கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி
கார்மேகம் போலே வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
முன்கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி
முன்கோபக்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
சாய்ந்த கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி
சாஸ்தா காவல்க்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
பம்பை பாலன் காவல் காரன் கருப்பசாமி
பதினெட்டாம் படி காவல் கருப்பசாமி. (கருப்பன்).
சந்தனப் பொட்டுக்காரன் கருப்பசாமி
சபரிமலைக் காவல்காரன் கருப்பசாமி. (கருப்பன்).
சல்லடையைக் கட்டி வாரான் கருப்பசாமி
சடைமுடிக்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
கச்சையைக் கட்டி வாரான் கருப்பசாமி
கை அரிவாள் காட்டி வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
மீசையை முறுக்கி வாரான் கருப்பசாமி
முச்சந்தியில் நடந்து வாரான் கருப்பசாமி. (கருப்பன்).