Category «Devotional Songs Lyrics»

Thiruppavai Song 5 with Meaning

திருப்பாவை பாடல் 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு …

Thiruppavai Song 4 with Meaning

திருப்பாவை பாடல் – 4 ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து …

Thiruppavai Song 3 with Meaning

திருப்பாவை பாடல் – 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் …

Thiruppavai Song 2 with Meaning

திருப்பாவை பாடல் – 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை …

Vaanaga Pushbam Mannodu Vaasam – Ayyappan Songs

வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம் தேவர் வழிபடும் ஐயனின் பாட்டில் பக்திதரும்ஸ்வரம் சூரவதம் மண்ணில் வந்த சண்முக அவதார நோக்கம் மகிஷி பாவத்தின் நிலையை மாற்றும் ஹரிகரபுத்ரன் (கானக) தெய்வீக பாலன் நாமம் எங்கள் இன்பமும் ஆகும் மாறாமனத்தால் என்றன் ஞானமே இல்லாது போகும் ஹரிகர பாலகன் வானகஜோதியின் அற்புதவண்ணம் மாயத்து மேகத்தை சிவ மூகில்தொட்டிட ஒழிந்திடும் இன்னல் (வானக) ஞானவிநாயகன் தம்பியமர்ந்துள்ள சன்னிதிகாண காத்திடும் நாயகன் மாலையணிந்திடும் அன்பரின் கூட்டங்களே கார்த்திகை மாதமே …

Ennendru Koorattum Ennappane – Ayyappan Songs

என்னென்று கூறட்டும் என்னப்பனே விழிபார்த்திடும் நாவிலும் உந்தன் முகம் உன்பக்தனென்தன் மனமெங்கும் கண்ணன் மகன் உன்மந்திரம் ஐயன் ஐயனய்யப்பா (என்) உள்ளத்தில் கல்லுமுள்ளுகுத்தும் தைக்கும் நந்தவனமிவ்வுலக வாழ்க்கைப் பாதை அறியானால் வந்ததிந்த பாதையன்றோ என்துயரம் மாறுதே உள்ளம் அன்பில் ஊறுதே ஐயன் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா (என்) ஐயன் அன்று இருமுடி சுமந்து போன இங்கு வந்து காட்டில் வாழும் காட்டாளர் வண்ண எழில் காணுகையில் சிவனையே கண்ணில் காணும் தன்மையென எண்ணுகின்றேன் சரணமய்யப்பா சாமி …

Kaatrinile Varum Geetham – Ayyappan Songs

காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம் நேற்றிலும் இன்றிலும் நாளையும் நாங்கள் கண்டிடும் தரிசம் வார்த்தையில் சொல்ல வார்த்தை வராத உன் முகதரிசனம் வானவர்தேடி வந்து வணங்கும் தேவனின் தரிசனம் வானம்பூமி யாவும் மகிழ்ந்து காணும் தரிசனம் வாடிய உள்ளம் வசந்தம் காணும் ஐயனின் தரிசனம் (காற்) பாவங்கள் என்று தெரிந்திருந்தாலும் விலகிட முடியாமல் பாசங்கள் பந்தங்கள் நேசங்கள் யாவும் மறுத்திட இயலாமல் கோபங்கள் தாபங்கள் மீறிட நாங்கள் குறைத்திட …

Uthithange Olivilakaka – Ayyappan Songs

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் சாமியே சரணம் தெறித்த ஒளியில் திரு விளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்ப சரணம் குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருளம்சம் (உதித்த) கலியுகவரதன் காலடிசேர்ந்தால் காணும் பேரின்பம் தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம் மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன் மணிகண்டன் சன்னதியில் (உதித்த) இருமுடி ஏந்தி திருவடி தேடி வரவேனோ ஐயா கரிமலை மேலே வரும் வழிபார்த்து காத்திடுமென் ஐயா தேக பலம்தா பாதபலம்தா தேடிவரும் நேரம் …

Un Aaradhanai – Ayyappan Songs

உன் ஆராதனை பொன்னலங்காரக்கோலம் ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம் கண்பாரத போது என் பசிதாகம் மீறும் பார்த்தாலும் இன்றெந்தன் பாவங்கள் தீரும் (உன்) அபிஷேக நேரம் உன் அழகானரூபம் – அதைக் கண்ட அடியார்க்கு வேறென்ன வேண்டும் நெய் வந்து உந்தன் மெய்சேரும்போது சரணம் உன்சரணம் சரணம் சரணம் எனப்பாட வேண்டும் (உன்) பம்பாவின் நீரில் நான் நின்றாடும்போது பதமான இதமான சுகமான இன்பம் தலைமீது உந்தன் இருமுடியைத்தாங்கி நடந்தேன் நடந்தேன் திருவாசல்தேடி (உன்)