திருப்புகழ் பாடல் 334 | Thiruppugazh Song 334

திருப்புகழ் பாடல் 334 – காஞ்சீபுரம் : தத்தித் தத்தி | Thiruppugazh Song 334

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் – தனதான

பாடல்

தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக் – கடலாலே

சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப் – பிறையாலே

சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற் – றழியாதே

செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் – தரவேணும்

கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப் – பொரும்வேலா

கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக் – கினியோனே

சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத் தையொழித் – திடும்வீரா

சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
சொக்கப் பதியிற் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !