திருப்புகழ் பாடல் 339 | Thiruppugazh Song 339

திருப்புகழ் பாடல் 339 – காஞ்சீபுரம் : கருமமான | Thiruppugazh Song 339

ராகம் – பெஹாக்
தாளம் – அங்கதாளம் (15 1/2)

தகிட – 1 1/2, தகதிமி – 2, தகதிமி – 2, தகதிமி – 2
தகதிமி – 2, தகதிமி – 2, தகதிமி – 2, தகதிமி – 2
தனன தானன தத்தன தனதன
தானா தத்தத் – தனதான

பாடல்

தரும மானபி றப்பற வொருகதி
காணா தெய்த்துத் – தடுமாறுங்

கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக் – கலைநூலின்

வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக் – கரிதாய

மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப் – புகல்வாயே

தரும வீம அருச்சுன நகுலச
காதே வர்க்குப் – புகலாகிச்

சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட் – டினிலாளுங்

குரும கீதல முட்பட வுளமது
கோடா மற்க்ஷத் – ரியர்மாளக்

குலவு தேர்கட் வச்சுதன் மருககு
மாரா கச்சிப் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !