திருப்புகழ் பாடல் 341 | Thiruppugazh Song 341

திருப்புகழ் பாடல் 341 – காஞ்சீபுரம் : கொத்தார் | Thiruppugazh Song 341

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தா – தனதான

பாடல்

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற் – செயல்மாறிக்

கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப் – புறவாசித்

தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ – எனவேகேள்

செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக் – கமறாதோ

நித்தா வித்தா ரத்தோ கைக்கே
நிற்பாய் கச்சிக் – குமரேசா

நிட்டு ரச்சூர் கெட்டோ டப்போர்
நெட்டோ தத்திற் – பொருதோனே

முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
முட்டா திட்டத் – தணிவோனே

முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !