திருப்புகழ் பாடல் 344 | Thiruppugazh Song 344

திருப்புகழ் பாடல் 344 – காஞ்சீபுரம் : நச்சு அரவ | Thiruppugazh Song 344

ராகம் – கானடா
தாளம் – ஆதி

தத்ததன தந்த தத்ததன தந்த
தத்ததன தந்த – தனதான

பாடல்

நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ்க ளங்க – மதியாலும்

நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
நத்திரைவ ழங்கு – கடலாலும்

இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
இச்சிறுமி நொந்து – மெலியாதே

எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி
இத்தனையி லஞ்ச – லெனவேணும்

பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
பச்சைமலை யெங்கு – முறைவோனே

பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
பத்திரம ணிந்த – கழலோனே

கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
கச்சியில மர்ந்த – கதிர்வேலா

கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்
கைத்தளைக ளைந்த – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !