திருப்புகழ் பாடல் 349 – காஞ்சீபுரம் : முத்து ரத்ந | Thiruppugazh Song 349
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த – தனதான
பாடல்
முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
முற்செ மத்து மூர்க்கர் – வெகுபாவர்
முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
முச்சர் மெத்த சூட்சர் – நகையாலே
எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
இட்ட முற்ற கூட்டர் – விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்
இப்ப டிக்கு மார்க்கம் – உழல்வேனோ
தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு
சிற்று டுக்கை சேட்டை – தவில்பேரி
திக்க மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
செக்க டற்கு ளாழ்த்து – விடும்வேலா
கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
கத்தர் பித்தர் கூத்தர் – குருநாதா
கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்
கச்சி நத்தி நாட்கொள் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !