திருப்புகழ் பாடல் 351 | Thiruppugazh Song 351

திருப்புகழ் பாடல் 351 – காஞ்சீபுரம் : வாய்ந்தப்பிடை | Thiruppugazh Song 351

தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன – தனதானா

பாடல்

வாய்ந்தப்பிடை நீடு குலாவிய
நீந்திப்பது மாதியை மீதினி
லூர்ந்துற்பல வோடையில் நீடிய – உகள்சேலை

வார்ந்துப்பக ழீயெதி ராகிமை
கூர்ந்துப்பரி யாவரி சேரவை
சேர்ந்துக்குழை யோடுச லாடிய – விழியாலே

சாய்ந்துப்பனை யூணவ ரானபொ
லாய்ந்துப்பாணி னாரிரு தாளினில்
வீழ்ந்திப்படி மீதினி லேசிறி – தறிவாலே

சாந்தப்பிய மாமலை நேர்முலை
சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்
மாய்ந்திப்படி போகினு மோர்மொழி – மறவேனே

சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ
பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ
காந்தப்பெரு நாதனு மாகிய – மதராலே

தாந்தக்கிட தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண – வெனதாளம்

காந்தப்பத மாறியு லாவுய
ராந்தற்குரு நாதனு மாகியெ
போந்தப்பெரு மான்முரு காவொரு – பெரியோனே

காந்தக்கலு மூசியு மேயென
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
காஞ்சிப்பதி மாநகர் மேவிய – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !