திருப்புகழ் பாடல் 353 | Thiruppugazh Song 353

திருப்புகழ் பாடல் 353 – திருவானைக்காவல்: அஞ்சன வேல்விழி | Thiruppugazh Song 353

தந்தன தானன தத்தத்தத்
தந்தன தானன தத்தத்தத்
தந்தன தானன தத்தத்தத் – தனதான

பாடல்

அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
மிங்கித மாகந கைத்துருக்கவு
மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் – நகரேகை

அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
மந்தர மாமுலை சற்றசைக்கவு
மம்பமரம் வீணில விழ்த்துடுக்கவு – மிளைஞோர்கள்

நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு – மெவரேனும்

நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
நின்பத சேவைய நுக்ரகிப்பது – மொருநாளே

குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம – கணராஜன்

கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
எங்கள் விநாயக னக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப்பிளை – யிளையோனே

துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்த சடானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய – பரிபாலா

துங்க கஜாரணி யத்திலுத்தம
சம்பு தடாகம டுத்ததக்ஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !