Thiruppavai Song 20 in Tamil Lyrics with Meaning

திருப்பாவை பாடல் 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய். பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை …

Thiruppavai Song 19 in Tamil Lyrics with Meaning

திருப்பாவை பாடல் 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய். பொருள்: “”குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை …

Thiruppavai Song 18 Tamil Lyrics with Meaning

திருப்பாவை பாடல் 18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை …

Thiruppavai Song 17 with Meaning

திருப்பாவை பாடல் 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்! அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய். பொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் …

Thiruppavai Song 16 with Meaning

திருப்பாவை பாடல் 16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய். பொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. …

Thiruppavai Song 15 with Meaning

திருப்பாவை பாடல் 15 எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய். பொருள்: “”ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே …

Thiruppavai Song 14 with Meaning

திருப்பாவை பாடல் 14 உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய். பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் …

Thiruppavai Song 13 with Meaning

திருப்பாவை பாடல் 13 புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பொருள்: பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் …

Thiruppavai Song 12 with Meaning

திருப்பாவை பாடல் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த …