Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அருளியல்பு

அருளியல்பு ஈனந் தருநா அதுநமக்கு வேண்டாவென்றானந்த நாட்டில் அவதரிப்ப தெந்நாளோ. 1. பொய்க்காட்சி யான புவனத்தை விட்டருளாம்மெய்க்காட்சி யாம்புவனம் மேவுநாள் தெந்நாளோ. 2. ஆதியந்தங் காட்டாமல் அம்பரம்போ லேநிறைந்ததீதில் அருட்கடலைச் சேருநாள் எந்நாளோ. 3. எட்டுத் திசைக்கீழ்மேல் எங்கும் பெருகிவரும்வெட்டவெளி விண்ணாற்றின் மெய்தோய்வ தெந்நாளோ. 4. சூதான மென்று சுருதிஎல்லாம் ஓலமிடும்மீதான மானவெற்பை மேவுநாள் எந்நாளோ. 5. வெந்துவெடிக் கின்றசிந்தை வெப்பகலத் தண்ணருளாய்வந்துபொழி கின்ற மழைகாண்ப தெந்நாளோ. 6. சூரியர்கள் சந்திரர்கள் தோன்றாச் சுயஞ்சோதிப்பூரணதே யத்திற் பொருந்துநாள் …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: தன் உண்மை

தன் உண்மை உடம்பறியும் என்னும்அந்த ஊழலெல்லாந் தீரத்திடம்பெறவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 1. செம்மையறி வாலறிந்து தேகாதிக் குள்ளிசைந்தஎம்மைப் புலப்படவே யாமறிவ தெந்நாளோ. 2. தத்துவமாம் பாழ்த்த சடவுருவைத் தான்சுமந்தசித்துருவாம் எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 3. பஞ்சப் பொறியைஉயி ரென்னும் அந்தப் பஞ்சமறச்செஞ்செவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 4. அந்தக் கரணமுயி ராமென்ற அந்தரங்கசிந்தைக் கணத்தில்எம்மைத் தேர்ந்தறிவ தெந்நாளோ. 5. முக்குணத்தைச் சீவனென்னும் மூடத்தை விட்டருளால்அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ. 6. காலைஉயிர் என்னுங் கலாதிகள்சொற் கேளாமல்சீலமுடன் …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அடியார் வணக்கம்

அடியார் வணக்கம் வெம்பந்தந் தீர்த்துலகாள் வேந்தன் திருஞானசம்பந் தனையருளாற் சாருநாள் எந்நாளோ. 1. ஏரின் சிவபோகம் இங்கிவற்கே என்னஉழவாரங்கொள் செங்கையர்தாள் வாரம்வைப்ப தெந்நாளே. 2. பித்தரிறை என்றறிந்து பேதைபால் தூதனுப்புவித்த தமிழ்ச்சமர்த்தர் மெய்புகழ்வ தெந்நாளோ. 3. போதவூர் நாடறியப் புத்தர்தமை வாதில்வென்றவாதவூர் ஐயன்அன்பை வாஞ்சிப்ப தெந்நாளோ. 4. ஓட்டுடன்பற் றின்றி உலகைத் துறந்தசெல்வப்பட்டினத்தார் பத்ரகிரி பண்புணர்வ தெந்நாளோ. 5. கண்டதுபொய் என்றகண்டா காரசிவம் மெய்யெனவேவிண்டசிவ வாக்கியர்தாள் மேவுநாள் எந்நாளோ. 6. சக்கர வர்த்தி தவராச யோகியெனும்மிக்கதிரு மூலன்அருள் …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: குமரமரபின் வணக்கம்

குமரமரபின் வணக்கம் துய்ய கரமலரால் சொல்லாமல் சொன்னவுண்மைஐயனைக்கல் லால்அரசை யாமணைவ தெந்நாளோ. 1. சிந்தையினுக் கெட்டாத சிற்சுகத்தைக் காட்டவல்லநந்தியடிக் கீழ்க்குடியாய் நாமணைவ தெந்நாளோ. 2. எந்தை சனற்குமர னாதிஎமை ஆட்கொள்வான்வந்த தவத்தினரை வாழ்த்துநாள் எந்நாளோ. 3. பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவிதமெய்கண்ட நாதன்அருள் மேவுநாள் எந்நாளோ. 4. பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகவுண்மைசாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ. 5. சிற்றம் பலமன்னுஞ் சின்மயராந் தில்லைநகர்க்கொற்றங் குடிமுதலைக் கூறுநாள் எந்நாளோ. 6. குறைவிலருள் ஞானமுதல் கொற்றங் குடியடிகள்நறைமலர்த்தாட் கன்புபெற்று …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி – தெய்வ வணக்கம்

எந்நாள்கண்ணி தெய்வ வணக்கம் நீர்பூத்த வேணி நிலவெறிப்ப மனறாடுங்கார்பூத்த கண்டனையான் காணுநாள் எந்நாளோ. 1. பொன்னாரும் மன்றுள்மணிப் பூவைவிழி வண்டுசுற்றும்என்னா ரமுதின்நலன் இச்சிப்ப தெந்நாளோ. 2. நீக்கிமலக் கட்டறுத்து நேரே வெளியிலெம்மைத்தூக்கிவைக்குந் தாளைத் தொழுதிடிநாள் எந்நாளோ. 3. கருமுகங்காட் டாமல்என்றுங் கர்ப்பூரம் வீசுந்திருமுகமே நோக்கித் திருக்கறுப்ப தெந்நாளோ. 4. வெஞ்சே லெனும்விழியார் வேட்கைநஞ்சுக் கஞ்சினரைஅஞ்சேல் எனுங்கைக் கபயமென்ப தெந்நாளோ. 5. ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்றிலங்கும்வீறு பரைதிருத்தாள் மேவுநாள் எந்நாளோ. 6. பச்சைநிற மாய்ச்சிவந்த பாகங் கலந்துவகைஇச்சையுடன் …

Thayumanavar Songs – பைங்கிளிக்கண்ணி

பைங்கிளிக்கண்ணி அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே. 1. அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச்சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே. 2. ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே. 3. ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்துசேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே. 4. ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங்கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே. 5. இன்பருள ஆடையழுக் கேறும்எமக் கண்ணல்சுத்தஅம்பரமாம் ஆடை அளிப்பானோ பைங்கிளியே. 6. உன்னாமல் ஒன்றிரண்டென் றோராமல் வீட்டுநெறிசொன்னான் வரவும்வகை சொல்லாய்நீ …

Thayumanavar Songs – பராபரக்கண்ணி

பராபரக்கண்ணி சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல்பாராதி யாண்ட பதியே பராபரமே. 1. கண்ணாரக் கண்டோர் கருப்பொருள்கா ணாமலருள்விண்ணூ டிருந்தஇன்ப வெற்பே பராபரமே. 2. சிந்தித்த எல்லாமென் சிந்தையறிந் தேயுதவவந்த கருணை மழையே பராபரமே. 3. ஆரா அமுதே அரசே ஆனந்தவெள்ளப்பேராறே இன்பப் பெருக்கே பராபரமே. 4. ஆரறிவார் என்ன அனந்தமறை ஓலமிடும்பேரறிவே இன்பப் பெருக்கே பராபரமே. 5. உரையிறந்த அன்பருளத் தோங்கொளியா யோங்கிக்கரையிறந்த இன்பக் கடலே பராபரமே. 6. எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்தித்திக்கும் ஆனந்தத் தேவே …

Thayumanavar Songs – பெற்றவட்கே

பெற்றவட்கே பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளைபெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். 1. ஆவாவென் றழுதுதொழுங் கைய ராகிஅப்பனே ஆனந்த அடிக ளேநீவாவாவென் றவர்க்கருளுங் கருணை எந்தாய்வன்னெஞ்சர்க் கிரங்குவதெவ் வாறு நீயே. 2. நீயேஇங் கெளியேற்குந் தாக மோகநினைவூடே நின்றுணர்த்தி நிகழ்த்த லாலேபேயேற்குந் தனக்கெனவோர் அன்பு முண்டோபெம்மானே இன்னமன்பு பெருகப் பாராய். 3. பாராயோ என்துயரம் எல்லாம் ஐயாபகருமுன்னே தெரியாதோ பாவி யேன்முன்வாராயோ இன்னமொரு காலா னாலும்மலர்க்காலென் சென்னிமிசை வைத்தி …

Thayumanavar Songs – தந்தைதாய்

தந்தைதாய் தந்தைதாய் மகவுமனை வாழ்க்கை யாக்கைசகமனைத்தும் மவுனியருள் தழைத்த போதேஇந்திரசா லங்கனவு கானல் நீராயஇருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே. 1. என்னைநான் கொடுக்கஒருப் பட்ட காலம்யாதிருந்தென் எதுபோய்என் என்னை நீங்காஅன்னைபோல் அருள்பொழியுங் கருணை வாரிஆனந்தப் பெருமுகிலே அரசே சொல்லாய். 2. அரசேநின் திருக்கருணை அல்லா தொன்றைஅறியாத சிறியேன்நான் அதனால் முத்திக்கரைசேரும் படிக்குனருட் புணையைக் கூட்டுங்கைப்பிடியே கடைப்பிடியாக் கருத்துட் கண்டேன். 3. கண்டேனிங் கென்னையும்என் றனையும் நீங்காக்கருணையும்நின் றன்னையும்நான் கண்டேன் கண்டேன்விண்டேன்என் றெனைப்புறம்பாத் தள்ள வேண்டாம்விண்டதுநின் அருட்களிப்பின் வியப்பா …