108 அம்மன் போற்றி – ஆடி மாதத்தில் கூற வேண்டிய மந்திரங்கள்
ஆடி வெள்ளி கிழமைகளில் அம்மனை பூஜித்து 108 அம்மன் போற்றி ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழலாம்!
- ஓம் அம்மையே போற்றி
- ஓம் அம்பிகையே போற்றி
- ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
- ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
- ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
- ஓம் ஆதார சக்தியே போற்றி
- ஓம் ஆதி பராசக்தியே போற்றி
- ஓம் இருள் நீக்குபவளே போற்றி
- ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
- ஓம் இடரைக் களைவாய் போற்றி
- ஓம் இஷ்ட தேவதையே போற்றி
- ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
- ஓம் ஈடிணை இலாளே போற்றி
- ஓம் ஈகை மிக்கவளே போற்றி
- ஓம் உமையவளே தாயே போற்றி
- ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
- ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
- ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
- ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
- ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
- ஓம் ஏழையர் அன்னையே போற்றி
- ஓம் ஐங்கரத்தவளே போற்றி
- ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
- ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
- ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி
- ஓம் கவுமாரித்தாயே போற்றி
- ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
- ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
- ஓம் காக்கும் அன்னையே போற்றி
- ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
- ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
- ஓம் குங்கும நாயகியே போற்றி
- ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
- ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
- ஓம் கை கொடுப்பவளே போற்றி
- ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
- ஓம் சக்தி உமையவளே போற்றி
- ஓம் சவுந்தர நாயகியே போற்றி
- ஓம் சித்தி தருபவளே போற்றி
- ஓம் சிம்ம வாகினியே போற்றி
- ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
- ஓம் சீதளா தேவியே போற்றி
- ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
- ஓம் செந்தூர நாயகியே போற்றி
- ஓம் செண்பகாதேவியே போற்றி
- ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
- ஓம் சொல்லின் செல்வியே போற்றி
- ஓம் சேனைத் தலைவியே போற்றி
- ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
- ஓம் தத்துவ நாயகியே போற்றி
- ஓம் தர்ம தேவதையே போற்றி
- ஓம் தரணி காப்பாய் போற்றி
- ஓம் தத்துவ நாயகியே போற்றி
- ஓம் தர்ம தேவதையே போற்றி
- ஓம் தரணி காப்பாய் போற்றி
- ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
- ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
- ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
- ஓம் தீமை களைபவளே போற்றி
- ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
- ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
- ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
- ஓம் தேசமுத்து மாரியே போற்றி
- ஓம் தையல் நாயகியே போற்றி
- ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
- ஓம் தோன்றாத் துணையே போற்றி
- ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
- ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
- ஓம் நாக வடிவானவளே போற்றி
- ஓம் நாத ஆதாரமே போற்றி
- ஓம் நாகாபரணியே போற்றி
- ஓம் நானிலம் காப்பாய் போற்றி
- ஓம் நித்ய கல்யாணியே போற்றி
- ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
- ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
- ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
- ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
- ஓம் நேசம் காப்பவளே போற்றி
- ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
- ஓம் பவளவாய் கிளியே போற்றி
- ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
- ஓம் பசுபதி நாயகியே போற்றி
- ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
- ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
- ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
- ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
- ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
- ஓம் பீடை போக்குபவளே போற்றி
- ஓம் பீடோப ஹாரியே போற்றி
- ஓம் புத்தி அருள்வாய் போற்றி
- ஓம் புவனம் காப்பாய் போற்றி
- ஓம் பூமாரித்தாயே போற்றி
- ஓம் பூவில் உறைபவளே போற்றி
- ஓம் பூஜைக்குரியவளே போற்றி
- ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
- ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
- ஓம் மழைவளம் தருவாய் போற்றி
- ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
- ஓம் மந்திர வடிவானவளே போற்றி
- ஓம் மழலை அருள்வாய் போற்றி
- ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
- ஓம் மாணிக்க வல்லியே போற்றி
- ஓம் மகமாயித் தாயே போற்றி
- ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
- ஓம் முத்தாலம்மையே போற்றி
- ஓம் முத்து நாயகியே போற்றி
- ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
- ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
- ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
- ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி