நவராத்திரி கீர்த்தனைகள் – 01
பல்லவி
தேவி பாதம் பணிந்தேன் – அனவரதம் வரதே பர (தேவி)
அனுபல்லவி
காவியார் நிலங்கள் சூழும் நாகைக்
காயரோஹணெசன் நேயமொடு மகிழ் தூயவடிவு கொள் (தேவி)
சரணம்
ஆர் துணைப்பாரம்பா இந்த உலகினில் –
ஆதரவாய் உனது அடியவரலதனைப்
பார்ப்பவர் எவர் பசி தீர்ப்பவர் எவர் கொடும்
பாவி என்று நீயும் தள்ளி விடாதே
பாதி மதி நன்முடி மீதில் ஒளிரவணி
பார்வதி அடியவர் ஆர்வமொடு பணியும்
பாத மலரை ஒரு போதும் இதய
மறவாத வரமருள் புராரி யிடமமரும் (தேவி)