Shiva Bajanai Songs – சிவ பஜனை பாடல்கள்

ஓம் நமசிவாய

கொன்றையைத் தரித்தவனே ஓம் நமசிவாய
காமனை யெரித்தவனே ஓம் நமசிவாய
காலனை யுதைத்தவனே ஓம் நமசிவாய
மங்கையை வரித்தவனே ஓம் நமசிவாய
கங்கையைத் தரித்தவனே ஓம் நமசிவாய
முப்புரம் எரித்தவனே ஓம் நமசிவாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹராய நம ஓம்
ஹர ஹர ஹர ஹராய நம ஓம்
சிவ சிவ சிவ சிவாயா நம ஓம்
சிவ சிவ சிவ சிவாயா நம ஓம்

டம டம டம டமரு பதே
டம டம டம டமரு பதே
தீமீதக தீமீதக தீமீதக மிருதங்க பாஜே
தீமீதக தீமீதக தீமீதக மிருதங்க பாஜே
ஹர ஹர மஹா தேவா
ஹர ஹர மஹா தேவா
கங்காதர கங்காதர கங்காதர
கங்காதர கங்காதர கங்காதர

போலோ போலோ சப் மில் போலோ
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
போலோ போலோ சப் மில் போலோ
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

ஜூட் ஜடா மேன் கங்கா தாரி
த்ரிஷுல தாரி டமரு பஜெ
டம டம டம டம டமரு பஜெ
கூஞ் ஊத ஓம் நம சிவாய
ஓம் நம சிவாயஓம் நம சிவாய
போலோ போலோ சப் மில் போலோ

சிவாய பரமேஷ்வராய, சந்திரஷேகராய நம ஓம்
பவாய குண சாம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்
சிவாய பரமேஷ்வராய, சந்திரஷேகராய நம ஓம்
பவாய குண சாம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்

பம் பம் போலோ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ பம் பம் போலோ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர பம் பம் போலோ

போலோ நாதா உமாபதே ஷம்போ சங்கரபசுபதே
சிவ சிவ சிவ ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர – சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ பம் பம் போலோ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர பம் பம் போலோ

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மா மணியே மழ பாடி உள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே