காவிரியில் துலா மாத தீர்த்தவாரி
நவராத்திரி காலங்களில், சிவாலயங்களில் உள்ள அம்பாளுக்கும் பெருமாள் கோயில்களில் உள்ள தாயாருக்கும் நவராத்திரி காலகட்டங்களில் கோலாகலமாக விழாக்கள் நடத்தப்படும்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், காலை மாலை என இரண்டு வேளையும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்களும் வேத பாராயணமும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனைகளும் சிறப்புற நடைபெறும்.
முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் தலங்களில், சிவனாருக்கும் அம்பாளுக்குமாக தனிச்சந்நிதி இருந்தால், அங்கே அந்தக் கோயில்களில், உமையவளுக்கு நவராத்திரி விழா எடுப்பார்கள். கொலு வைப்பார்கள். அம்பாளை அலங்கரித்து, பிராகார உத்ஸவமாக வரச் செய்வார்கள். உரிய நைவேத்தியங்களைப் படைத்து, அம்பிகையை ஆராதிப்பார்கள்.
ஸ்ரீபார்வதிதேவிக்கும் ஸ்ரீமகாலக்ஷ்மிக்கும் நவராத்திரி விழா எடுப்பது போல், ஸ்ரீவள்ளி மற்றும் ஸ்ரீதெய்வானைக்கும் நவராத்திரி விழா கொண்டாடும் கோயிலாகத் திகழ்கிறது திருப்போரூர் முருகன் கோயில்.