விநாயகர் சதுர்த்தி மந்திரங்கள் & விநாயகர் துதிகள்

விநாயகர் துதி 1
வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம்,
மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!
விநாயகர் துதி 2
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே!
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
விநாயகர் துதி 3
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

விநாயகர் துதி 4
விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
விநாயகர் துதி 5
பிடி அதன்உரு உமை கொளமிகு
கரியது வடிகொடு தனதடி வழிபடும்
அவர் இடர் கடிகணபதி வர
அருளினன் மிகு கொடை வடிவினர்
பயில் வலி வலமுறை இறையே!
விநாயகர் துதி 6
அல்லல்போம், வல்வினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்ததொல்லை போம்,
போகாத் துயரம் போம் நல்ல குணமதிகமாம்
அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!