ஆதிசங்கரர் அருளிய சிவபஞ்சாக்ஷர துதி | Shiva Panchakshara Stotram Lyrics in Tamil

ஆதிசங்கரர் அருளிய சிவபஞ்சாக்ஷர துதி

தினமும் படிக்க வேண்டிய ஆதிசங்கரர் அருளிய சிவபஞ்சாக்ஷர துதி

நாகபதி மலையானே! நயனங்கள் மூன்றானே!
ஆகமணி நீற்றானே! அருந்தேவா பேரீசா!
ஆகுநித்யா! தூயவனே! ஆர்திசையின் ஆடையனே!
நாகமுறை நகாரனே! நமசிவாயனே! போற்றி!

மன்மங்கை நீர்ச்சாந்தம் மணங்கமிழ்ப் பூசிட்டோய்!
தொல்நந்தி ப்ரமதபதி தூத்தலைவா! மகேசனே!
நல்மண மந்தாரமுதல் நறைமலராற் பூசை கொள்வோய்!
நல்லுறவே மகாரனே! நமசிவாயனே போற்றி!

சிவமூர்த்தி! கவுரிமுக சீர்க்கமல வனமலர்த்தும்
நவக்கதிரே! தட்சமகம் நசித்திட்டோய்! நீலகண்டா!
துவண்டாடும் விடைக்கொடியைத் தூக்கியவா! தொல்பொருளே!
நவநவத்தோய்! சிகாரனே! நமசிவாயனே போற்றி!

வசிட்டமுனி கலசமுனி கௌதம மா முனிவோர்கள்
இசைவானோர் அருச்சிக்கும் எந்தை! அரசேகரனே!
மிசைக்கதிரோன் திங்கள், தீ விழிமூன்றாய் ஆனவனே!
நசிவில்லாய்! வகாரனே நமசிவாயனே! போற்றி!

யட்ச உரு எடுத்தோனே! எழிலாரும் சடைதரித்தோய்!
இச்சையுடன் பினானமதை எந்ந்து திருக்கையானே!
அட்சரனே! சிறந்தோனே! அருந்தெவா! திகம்பரனே!
நட்புல யகாரனே! நமசிவா யனே! போற்றி!

சிவனுடைய பஞ்சாட்சரத்தால் சேர்த்திட்ட இதை
சிவ சந்நிதிமுன் செப்பிடுவர் யாவரவர்
சிவனுலகை அடைந்து, பின் சிவனோடு ஒன்றி
சிவனுடைப் பேரானந்தம் சார்ந்ததனில் ஆழ்குவர்.