முகுந்த மாலா 11 | Mukunda Mala Stotram 11 in Tamil with Meaning
முகுந்த மாலா 11
மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஶ்சிரம் யாதனா꞉
நாமீ ந꞉ ப்ரப⁴வந்தி பாபரிபவ꞉ ஸ்வாமீ நனு ஶ்ரீத⁴ர꞉ |
ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம꞉ || 11 |||
விளக்கம்:
ஓ மூட மனமே யமனுடையதான துன்புறுத்தல்களை வெகுகாலம் பலவிதமாக ஆலோசித்து பயப்படாதே பாபிகளுக்குப் பகைகளான இவை சாதியற்றவை ஏனெனில் லஷ்மீபதி நம் தலைவனல்லவா? ஆகவே சோம்பலை அகற்றிவிட்டு பக்தியினால் எளிதில் அடையக்கூடிய நாராயணனை த்யானம் செய் உலகின் துன்பங்களைத் துடைக்கின்றவன் தன் பக்தனுடைய துன்பத்தை அகற்றமாட்டானா?