முகுந்த மாலா 12 | Mukunda Mala Stotram 12 in Tamil with Meaning

முகுந்த மாலா 12 | Mukunda Mala Stotram 12 in Tamil with Meaning

முகுந்த மாலா 12

ப⁴வஜலதி⁴க³தானாம் த்³வந்த்³வவாதாஹதானாம்
ஸுதது³ஹித்ருகலத்ரத்ராணபா⁴ரார்தி³தானாம் |
விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவானாம்
ப⁴வது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் || 12 ||

விளக்கம்:

சம்சாரமாகிய சாகரத்தில் உள்ளவர்களும் சீதம் உஷ்ணம் சுகம் துக்கம் போன்ற இரட்டை களாகிய காற்றால் அடிக்கப்பட்டவர்களும் பிள்ளை பெண் மனைவி இவர்களை காப்பாற்றுதல் ஆகிய பாரத்தால் வருந்துபவர்களும், கொடிய விஷய சுகங்களாகிய ஜலத்தில் மூழ்கியவர்களும் ஓடம் இல்லாதவர்களுமான மனிதர்களுக்கு மகாவிஷ்ணுவாகிய ஓடம் ஒரே ஒரு புகலிடமாக ஆகட்டும்.